மேலும் அறிய

Yashika Aanand | யாஷிகா ஆனந்த் உடல்நிலையின் முன்னேற்றம்; பிரபல நடிகருடன் எடுத்த வைரல் செல்பி..!

கடந்த ஒரு மாத காலமாகவே  கொஞ்சம் கொஞ்சமாக யாஷிகா ஆனந்தின் உடல்நிலை தேறிவந்த நிலையில், தற்போது எழுந்து நடக்கும் அளவிற்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான யாஷிகா ஆனந்த் கடந்த மாதம் ஏற்பட்ட விபத்தின் காரணமாக எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்தார். தற்போது அவரது உடல் நலம் தேறிவரும் நிலையில் எழுந்து நின்று நடிகர் அசோக்குடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான நடிகை யாஷிகா ஆனந்த், கடந்த மாதம்  தனது தோழியான ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த வள்ளிச்செட்டி பவனி மற்றும் இரண்டு ஆண் நண்பர்களுடன் புதுச்சேரி சென்று இருந்தார். புதுச்சேரியில் யாஷிகா ஆனந்த், நண்பர்களும் அங்கு நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். பின்பு பாண்டிச்சேரியிலிருந்து தனது நண்பர்களுடன் சென்னை  கிழக்குக் கடற்கரை சாலை வழியாக மீண்டும் சென்னை நோக்கி சென்றபோது, மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில் சாலையின் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் யாஷிகா ஆனந்த பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால் அவரது தோழியான வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஷிகா ஆனந்த் மீது காரை வேகமாக ஓட்டியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட மூன்று வழக்குகள் பதியப்பட்டன.

Yashika Aanand | யாஷிகா ஆனந்த் உடல்நிலையின் முன்னேற்றம்; பிரபல நடிகருடன் எடுத்த வைரல் செல்பி..!

இதனையடுத்து தனது தோழி இறந்த செய்தியைக் கேட்ட யாஷிகா, எனக்கு மிகவும் குற்ற உணர்வாக உள்ளது என்று இன்ஸ்டாவில் தெரிவித்திருந்தார். மேலும் வீட்டுக்குச்சென்று சிகிச்சை மேற்கொண்டால் தனக்கு உயிரிழந்த தோழியின் நினைவு வரும் என்பதால், செவிலியர் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த யாஷிகா, தன்னுடைய இடுப்பு மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் 5 மாதத்திற்கு நிற்கவோ நடக்கவோ முடியாது என்றும், இயற்கை உபாதை கூட படுக்கையில்தான் எனவும் வேதனையுடன் சமூக வலைத்தளத்தின் வாயிலாக தனது ரசிகர்களிடம் தெரிவித்திருந்தார். ரசிகர்களும் நீங்கள் விரைவில் குணமடைந்துவிடுவீர்கள் என்று நம்பிக்கை தெரிவித்துவந்தனர்.

மேலும் இன்ஸ்டாவில் அவ்வப்போது தோழியுடன் மகிழ்ச்சியாக இருந்த புகைப்படங்கள், கேளிக்கையாக பூமராங் செய்தது மற்றும் உடல்நிலையில் ஏற்பட்டுவரும் புகைப்படங்களை பதிவிட்டுவந்தார். கடந்த ஒரு மாத காலமாகவே  கொஞ்சம் கொஞ்சமாக அவரது உடல்நிலை தேறிவந்த நிலையில், தற்போது எழுந்து நடக்கும் அளவிற்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

Yashika Aanand | யாஷிகா ஆனந்த் உடல்நிலையின் முன்னேற்றம்; பிரபல நடிகருடன் எடுத்த வைரல் செல்பி..!

சமீபத்தில் நடிகர் அசோக், யாஷிகா ஆனந்தின் உடல்நிலைக்குறித்து விசாரிப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது எழுந்து நின்றபடி யாஷிகா மற்றும் அவருடைய குடும்பத்தினருடன் நடிகர் அசோக் எடுத்துக்கொண்ட செல்பி தற்போது வைரலாகி வருகிறது. மேலும் நடக்கவே முடியாமல் படுத்தபடுக்கையாக இருந்த யாஷிகா தற்போது எழுந்து நின்று நடப்பது அவரது ரசிகர்களுக்கி்டையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Embed widget