விஜி சந்திரசேகர் மகளுக்கு திருமணம்.. குவிந்த திரை பிரபலங்கள்.. வாவ் சுவாரஸ்யங்கள்..
Viji Chandrasekar : கேப்டன் மில்லர் அம்மா விஜி சந்திரசேகர் மகள் சுரக்ஷாவின் திருமணம் இன்று நடைபெற்றது. ஏராளமான திரைப்பட பிரபலங்கள் கலந்துகொன்டு வாழ்த்தினர்.
80ஸ் காலகட்டத்தில் பிரபலமான ஒரு நடிகையாக பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை விஜி சந்திரசேகர். இவர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சரிதாவின் தங்கையாவார்.
சிறந்த குணச்சித்திர நடிகை :
கே. பாலசந்தர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான 'தில்லு முல்லு' படத்தில் ரஜினிகாந்த் தங்கையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜி சந்திரசேகர். அதற்கு பிறகு பிடிப்பில் கவனம் செலுத்தியதால் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போதும் அதை நிராகரித்துள்ளார். படிப்பை முடித்ததும் தெலுங்கில் சினிமாவில் நடித்து வந்த விஜி சந்திரசேகர், கிழக்கு சீமையிலே திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் வெகு சிறப்பாக நடித்துள்ளார். பிரியங்கா, பார்த்தாலே பரவசம், ஆயுத எழுத்து, அரக்கோணம், சமஸ்தானம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கேப்டன் மில்லர் அம்மா :
சமீபத்தில் கூட அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான நடிகர் தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் சிவராஜ்குமார் அம்மாவாக நடித்திருந்தார். தற்போது ஒரு சில படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
திருமண வாழ்க்கை :
வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் சீரியல்களில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மிகவும் பிஸியான ஒரு நடிகையாக நடித்துகொண்டு இருக்கும் போதே 1995ம் ஆண்டு தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சுரக்ஷா மற்றும் லவ்லீன் என இரு மகள்கள் உள்ளனர். நடிப்பில் கவனம் செலுத்தி வருவதுடன் கணவரின் பிசினஸையும் கவனித்து வருகிறார் விஜி சந்திரசேகர்.
விஜி மகள் திருமணம் :
நடிகை விஜி சந்திரசேகர் மூத்த மகள் சுரக்ஷாவின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திருமண விழாவில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். காலா மாஸ்டர், ராதிகா, சீதா, நடிகர் சூர்யா, சமுத்திரக்கனி, விஜயகுமார் அருண் விஜய், மீனா, லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் ஏராளமானோர் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
தனுஷ் - சூர்யா :
நடிகர் தனுஷ் நேற்று உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொண்டதால் அவரால் இந்த திருமண விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனது என கூறப்படுகிறது. நடிகர் சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பில் 2022ம் ஆண்டு வெளியான 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் நீதிபதியாக விஜி சந்திரசேகர் நடித்திருந்தார்.