Vanitha | நீ என்ன என் பாய்ஃப்ரெண்டா..?? VJ-வை அலறவைத்த வனிதா விஜயகுமார்..!
நடிகை வனிதா விஜய்குமார் பிரபல தொகுப்பாளரிடம் வம்பு இழுக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜய்குமார் விஜயகுமார். இவர் நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்திருக்கிறார். வனிதா விஜய்குமார் விஜயகுமார் இந்த பெயரைக் கேட்டாலே, எல்லாருக்கும் நினைவுக்கு வருவது, சர்ச்சைதான். எப்பொழுது டிரெண்டிங்கில் இருக்கும் இவர், செல்லும் இடம் எல்லாம் வம்பு செய்வதில் வல்லவர். தனது பேச்சில் உறுதியாகவும் இருப்பவர். பாசிட்டிவ் கமெண்ட்ஸும், நெகட்டிவ் கமெண்ட்ஸும் சரிசமமாக வாங்குபவர்
இவரது படம் தாண்டி, தனிப்பட்ட வாழ்க்கை குறித்துத் தெரிந்துகொள்ள பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். சில காலங்களாக அமைதியாக இருந்த இவர், பிக்பாஸ் மூலம் மீண்டும் லைம் லைட்டிற்கு வந்தார். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தன்னுடைய ஆளுமைகளால் சக போட்டியாளர்களை டஃப் கொடுத்து ஓடவிட்டார். இதனையடுத்து மக்களிடம் அவருக்கு எதிர்மறையாக விமர்சனங்கள் கிடைத்தவுடன் போட்டியில் இருந்து வெளியேறினார்,
தொடர்ந்து BB ஜோடிகள் நிகழ்ச்சியில் தன்னுடைய சக பிக்பாஸ் போட்டியாளரான சுரேஷுடன் கலந்து கொண்டு, நடனம் அடினார். பிறகு நடுவர், ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் போட்டியில் இருந்து வெளியேறினார். சமீபத்தில் இவர், தாலியுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. அதனைக் கண்ட நெட்டிசன்கள் அவர் நான்காவதாகத் திருமணம் செய்து கொண்டார் என செய்தி பரப்பினர். பிறகு தான் பவர் ஸ்டாருடன், பிக்கப் படத்தில் நடிக்கிறார் என்பது தெரிய வந்தது. மேலும் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில், 4 இல்ல, 40 திருமணம் கூட செய்வேன் என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் வனிதா விஜய்குமார் சமீபத்தில் பிரியாணி கடை திறப்பு விழாவிற்கு சென்று இருந்தார். அப்போது அவருடன் ஓவியா, பூர்ணா, ரேஷ்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
View this post on Instagram
அங்கு பிரபல யூடியூப் சேனலின் தொகுப்பாளர் ஒருவர் வனிதா விஜய்குமாரிடம் வணக்கம் சொல்லிப் பேச ஆரம்பித்தார். பிறகு இன்னொரு விருந்தினரிடம் பேசலாமா எனக் கேட்டார். அப்போது வனிதா விஜய்குமார், யாரை வேண்டுமானாலும் நீ பேட்டி எடு, நீ என்ன என்னுடைய பாய் ஃபிரெண்டா. நீ பிறரிடம் பேசினால் எனக்கு என்ன நான் பொறாமையா பட போகிறேன் என கலாய்த்தார். வனிதா விஜய்குமார் சொன்னதைக் கேட்ட தொகுப்பாளர் என்ன சொல்வது என்றே தெரியாமல் வாய் அடைத்து போய் நின்றார். (தில்வாலே புச்டானேச்சா.. பிஜிஎம்மா!!)
இவர் தற்போது, இந்தியில் வெளியான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். அதில் சிம்ரன், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்டோர் அப்படத்தில் நடித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

