Simbu and Sreenidhi: அப்போ சிம்புவை கல்யாணம் பண்ண தர்ணா.. இப்போ அண்ணா! ஷாக் கொடுத்த ஸ்ரீநிதி! குழப்பத்தில் ரசிகர்கள்
சிம்புவை பிடிக்கும், க்ர்ஷ்.. ஆனால் லவ் பண்ணல, அவர் அண்ணன் மாதிரி என பிரச்னைக்கு, நடிகை ஸ்ரீநிதி புதுக்கதையை பேசியுள்ளார்.
சிம்புவை காதலிக்கவில்லை:
சிம்புவை பிடிக்கும், ஆனால் அவரை லவ் பண்ணல, அவர் அண்ணன் மாதிரி என்று சின்னத்திரை நடிகை கூறியுள்ளது, புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக, நடிகர் சிம்புவை காதலிப்பதாக சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி கூறியது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், அவர் சிம்பு தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று, சிம்புவின் வீட்டின் முன்பு, தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். இது சிம்பு ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் இது குறித்து, சிம்பு எதுவும் கூறவில்லை. அப்போது டி.ஆர் ராஜேந்திரரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால், அவர் தந்தையின் உடல்நிலையில் கவனம் செலுத்தி கொண்டிருந்தார்.
சிம்புவை லவ் பண்ணினேன்; ஆனால் இப்போ பண்ணவில்லை:
இந்நிலையில், தற்போது சிம்புவை நான் காதலிக்கவில்லை என்றும், அவர் அண்ணன் மாதிரி என்றும் நடிகை ஸ்ரீநிதி தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, கொஞ்சம் எமோஷனலாக இருந்தேன், அப்போது சிம்பு எனக்காகத்தான் கல்யாணம் பண்ணல நினைச்சன், அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு தான் யோசிச்சேன், சிம்பு என்னை காதலிச்சி இருந்தா,என்னிடம் வந்து பேசிரிப்பாறுனு புரிஞ்சிக்கிட்டேன்.
சிம்பு சார், சாரி:
சிம்புவை ஏன் நினைத்தேனா, அவரும் என்னை மாதிரி தான் ,இயக்குநர், பாடலாசிரியர், நடிகர், நடனம் ஆடுவார், அதனால தான் அவர் என்னை காதலிப்பாரு நினைச்சிக்கிட்டேன் என தெரிவித்தார். சிம்பு சார், என்னை மன்னிச்சிருங்க, நான் உங்களை கஷ்டப்படுத்தனும்னு நினைக்கல, உங்களுக்கும் புரியும் என ஸ்ரீ நிதி தெரிவித்தார். இந்நிலையில் பல நாட்களாக சிம்புவை வைத்து அதிகம் பேசப்பட்டு வந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்