ஏஐ மூலம் ஶ்ரீலீலாவின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்..ரசிகர்களிடம் மன்றாடிய பராசக்தி பட நடிகை
ஏஐ மூலம் உருவாக்கப்படும் அபத்தங்களை ஆதரிக்க வேண்டாம் என தனது ரசிகர்கர்களுக்கு நடிகை ஶ்ரீலீலா வேண்டுகோல் விடுத்துள்ளார் .

ஏ.ஐ மூலம் நாளுக்கு நாள் பிரபலங்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக நடிகைகளை வைத்து ஏஐ மூலம் பல ஆபாசமான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் பரவலாக பகிரப்படுகின்றன. அண்மையில் இதுகுறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார். அந்த வகையில் பராசக்தி பட நடிகை ஶ்ரீலீலாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களை ஆதரிக்கவோ பகிரவோ வேண்டாமென ஶ்ரீலீலா தனது ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்
ரசிகர்களுக்கு ஶ்ரீலீலா கோரிக்கை
ஏஐ மூலம் உருவாக்கப்படும் அபத்தமான வீடியோ மற்றும் புகைப்படங்களை ஆதரிக்க வேண்டாம் என ஶ்ரீலீலா தனது ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் அவர் " ஏஐ மூலம் உருவாக்கப்பட்டும் முட்டாள்தனங்களை ஆதரிக்க வேண்டாம் என ஒவ்வொரு சமூக ஊடக பயன்பாட்டாளரிடமும் நான் கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் துஷ்பிரயோகம் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது. தொழில்நுட்பத்தில் ஏற்படும் முன்னேற்றங்கள் வாழ்க்கையை எளிமைப்படுத்துவதற்காகவே, சிக்கலாக்குவதற்காக அல்ல என்பது என் கருத்து.
ஒவ்வொரு பெண்ணும் ஒரு மகள், பேத்தி, சகோதரி, தோழி அல்லது சக ஊழியர், அவள் கலையைத் தனது தொழில்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்தாலும் கூட. நாம் ஒரு பாதுகாக்கப்பட்ட சூழலில் இருக்கிறோம் என்ற நம்பிக்கையுடன், மகிழ்ச்சியைப் பரப்பும் ஒரு துறையில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறோம். எனது பிஸியான ஷெட்யூல் காரணமாக ஆன்லைனில் நடக்கும் பல விஷயங்கள் குறித்து எனக்குத் தெரியாது, இதை என் கவனத்திற்குக் கொண்டுவந்ததற்காக எனது நலம் விரும்பிகளுக்கு நன்றி கூறுகிறேன். இது மிகவும் தொந்தரவாகவும் பேரழிவை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. என் சக நடிகர்களும் இந்த பிரச்சனைகளை நான் காண்கிறேன், மேலும் அனைவரின் சார்பாகவும் நான் இதை கேட்டுக்கொள்கிறேன். கருணையுடனும் கண்ணியத்துடனும், என் பார்வையாளர்கள் மீது நம்பிக்கையுடனும், தயவுசெய்து எங்களுடன் நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அடுத்தகட்ட நடவடிக்கையை அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள்
— Sreeleela (@sreeleela14) December 17, 2025





















