மேலும் அறிய

அந்த கெட்ட பழக்கம்... பிரேம்யோடு கேரவனில் இருந்தபோது நடந்த சம்பவம்! சோனா பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

தம் அடிக்கும் பழக்கம் எப்படி வந்தது, அடிமையானது எப்படி மற்றும் அதிலிருந்து மீண்டு வந்தது எப்படி என்று நடிகை சோனா கூறியுள்ளார்.

'பூவெல்லாம் உன் வாசம்' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான நடிகை சோனா ஷாஜகான், சிவப்பதிகாரம், மிருகம், குசேலன், கோ, ரொம்ப நல்லவன் டா நீ, ஜித்தன் 2, ஸ்ரீ சபரி அய்யப்பன் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தான் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தனக்கு இருந்த கெட்ட  பழக்கம் பற்றி கூறியிருக்கிறார். மேலும், எப்படி அதிலிருந்து மீண்டு வந்தேன் என்பது குறித்தும் பேசியிருக்கிறார். 

தனது பயோபிக் படத்தை 'ஸ்மோக்' என்ற டைட்டிலில் வெப் சீரிஸாக இயக்கியுள்ளார். 8 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸில் நடிகை சோனா தான் 5 வயது முதல் தற்போது வரையில் வாழ்க்கையில் சந்தித்த எல்லா பிரச்சனைகளையும் படமாக்கியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் பிரேம்ஜியை வைத்து ஒரு படம் இயக்கிக் கொண்டிருந்தேன். 

அந்த கெட்ட பழக்கம்... பிரேம்யோடு கேரவனில் இருந்தபோது நடந்த சம்பவம்! சோனா பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு நான் ஒரு இருக்கையில் அமர்ந்து கணக்கு பார்த்துக் கொண்டிருந்தேன். கேரனுக்கு உள்ளே ஒரு ரூமில் பிரேம்ஜி இருந்தார். அப்போது எனக்கு ஒரு சத்தம் கேட்டது. அது சில்மிஷம் செய்வது போன்று கேட்டது. அதனால், நான் பிரேம்ஜி கதவை தட்டினேன். அதே போன்று அவரும் கதவை திறந்து எனக்கும் அந்த சத்தம் கேட்டது என்றார். மேலும், இருவர் பேசுவது போன்று சத்தம் கேட்கவே, நானும் பிரேம்ஜியும் கேரவன் கர்ட்டனை திறந்து பார்த்தோம்.

அப்போது தான் எங்களுக்கு புரிந்தது. மேனேஜர் துணை நடிகையிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தார். அவர் நான் பேசி தான் உங்களுக்கு டபுள் மடங்கு சம்பளம் வாங்கி கொடுத்தேன். எதற்கு என்றால் நீ என்னுடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்பதற்கு தான் என்று பேசிக் கொண்டிருந்தார்.  எனக்கு வந்த கோபத்தில் அந்த மேனேஜரை கன்னத்தில் அறைந்துவிட்டேன். அப்போது தான் பிரேம்ஜி சிக்ரெட் பிடித்துக் கொண்டிருந்தார். அதை வாங்கி நான் அடித்தேன். பின்னர் எப்போதெல்லாம் நான் பதற்றமாக, டென்ஷனாக இருக்கிறேனோ அப்போதெல்லாம் நான் தம் அடிப்பது வழக்கமாகிவிட்டது. 1, 2, 3, 4 என்று சிகரெட்டுகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போனது. ஒரு கட்டத்தில் எத்தனை சிக்ரெட் பிடிக்கிறேன் என்று எனக்கே தெரியாமல் போய்விட்டது.

அந்த கெட்ட பழக்கம்... பிரேம்யோடு கேரவனில் இருந்தபோது நடந்த சம்பவம்! சோனா பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

அப்போது தான் எனக்கு புரிந்தது. இது நல்லதல்ல என்று . பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தம் அடிப்பதை நிறுத்திவிட்டேன். இப்போது முழுவதுமாக நிறுத்திவிட்டேன். சிகரெட் பிடிப்பது, சரக்கு அடிப்பது எல்லாம் தவறாக தெரிந்த காலம் மாறி இப்போது பேஷன், ஸ்டைலுக்காக தம், சரக்கு என்று அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். டாஸ்மாக்கிற்கு கூட பெண்கள் சகஜமாக சென்று சரக்கு வாங்கி அடிக்கிறார்கள். எதுவாக இருந்தாலும் ஒரு முறை அடிமையாகிவிட்டால் அதிலிருந்து மீண்டு வருவது கஷ்டம் என்று சோனா கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget