‛இப்படி ஒரு இடத்தில் பிறந்தநாள் கொண்டாட்டமா?’ போட்டோக்களை வெளியிட்ட சினேகா!
புன்னகை அரசி சினேகா தனது 41 வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.
புன்னகை அரசி என்ற பட்டத்தை கே.ஆர். விஜயாவிற்கு பிறகு பெற்று கொண்டாடப்பட்ட நடிகை சினேகா. மிகவும் வசீகரமான சிரித்த முகம், யதார்த்தமான அழகு இது தான் நடிகை சினேகாவின் அடையாளம். தனது 41 வது பிறந்த நாளான நேற்று தனது கணவர் குழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடினார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
அறிமுகமே தூள் :
2001ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ’இங்கே ஒரு நீலபட்சி’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஆனால் அதே சமயத்தில் தமிழில் நடிகர் பிரசாந்த் ஜோடியாக "விரும்புகிறேன்" படத்தில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த சினேகாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கமல், அஜித், விஜய், சிம்பு, தனுஷ், விக்ரம், ஸ்ரீகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். கதாநாயகியாக முன்னணியில் இருந்த போது நடிகர் பிரசன்னாவை பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த அழகான தம்பதிக்கு விஹான் என்ற ஒரு மகனும் ஆத்யந்தா என்ற ஒரு மகளும் உள்ளனர்.
View this post on Instagram
பர்த்டே போட்டோஸ்:
இந்த அழகான இல்லத்தரசியின் பிறந்தநாளை குடும்பத்துடன் இயற்கை எழில் கொஞ்சும் ஒரு அழகான இடத்தில் மிகவும் ரம்மியமாக கொண்டாடினர் சினேகா. சோசியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் சினேகா அவ்வப்போது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்வது வழக்கம். அதே போல நேற்று பிறந்தநாள் கொண்டாட்டமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்
ரீ என்ட்ரி கொடுத்துள்ள சினேகா :
இரண்டாவது பிரசவத்திற்கு பிறகு ஒரு பிரேக் எடுத்துக்கொண்ட நடிகை சினேகா தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது விளம்பர படங்களில் நடித்து வருவதில் மிகுந்த அக்கறை காட்டுகிறார். விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் ஒவ்வொருவரின் வீட்டின் வரவேற்பறைக்கு நேரடியாக செல்வது எனக்கு உற்சாகத்தையும் அவர்களின் அன்பையும் தருகிறது என்பதை அவரே ஒரு முறை ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.