''இங்கு மரியாதையில்லை.. வளரவிடமாட்டாங்க..'' சினிமாத்துறையை கிழித்து தொங்கவிட்ட சரண்யா!
சினிமாவில் பெண்களை வளரவிட மாட்டார்கள் என்று நடிகை சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் பெண்களை வளரவிட மாட்டார்கள் என்று நடிகை சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். அவர் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
நயன்தாராவுக்கு ஹேட்ஸ் ஆஃப்
சினிமாவில் பெண்களுக்கு மரியாதையில்லை. பெண்களை முன்னிலைப் படுத்தும் படங்கள் குறைவு. பெண்களை வளரவே விடமாட்டார்கள். எப்படி கீழே இழுப்பது என்றே பார்ப்பார்கள். பெரிய நாயகர்களின் படத்தில் ஹீரோவுக்கு பின்னால் மட்டுமே கதை இருப்பதாகக் காட்டுவார்கள். நிஜ வாழ்வில் ஒரு ஆணும் பெண்ணும் இருந்தால் அந்தப் பெண்ணின் பின்னால் மட்டும் எந்தக் கதையும் இருக்காதா என்ன? ஆனால் அதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
அப்படிப்பட்ட சினிமா உலகில் தனக்கென தனி இடத்தை வைத்துள்ளார் நயன்தாரா. அவர் செய்துள்ளது மிகப்பெரிய சாதனை. அவருக்கு தலை வணங்குகிறேன். நயனுடன் நடித்தபோது எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. அதுபோல் அவர் பெரிய நடிகையாக இருந்தாலும் எந்த பந்தாவும் இல்லாமல் இருப்பார். அவர் ரொம்ப அழகானவர் மட்டுமல்ல, உண்மையானவர். நல்லவர். அவர் மனிதர்களை சரியாக கணிக்கிறார். அவர் யாருடனாவது பேசவில்லை என்றால் அந்த நபர் உண்மையிலேயே மோசமான நபர் என்பதை தெரிந்து கொள்ளலாம். எதிராளியை சமாளிக்க ஒதுங்கிக் கொள்வது சரி என நினைத்து தள்ளிவைப்பார். நயனை நான் என் மகள் என்று சொல்லி தான் பேசுவேன்.
யோகிபாபு ஒரு பொம்மை!
அதுபோல் நடிகர் யோகிபாபு பார்த்தும் சொல்ல வேண்டும். அவர் ஒரு பொம்மை மாதிரி. அவரை எல்லாருக்குமே அவ்வளவு பிடிக்கும். அவர் ஸ்க்ரீனில் வந்து நின்று டயலாக் பேசினாலே போதும். அவர் ஒரு திறமைசாலி. கோலிவுட்டின் அம்மா என்ற பட்டம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ரொம்ப கெத்தா இருக்கு. எனக்கு வன்முறை பிடிக்காது. சத்தம் பிடிக்காது. சண்டை பிடிக்காது. டிவியில் வடிவேலு, இளையராஜா சார்ந்த நிகழ்ச்சிகள் மட்டுமே பார்ப்பேன். அப்புறம் பேப்பர் படிக்க மாட்டேன். அறியாமையும் மகிழ்ச்சியே என்பதற்கு நான் தான் நல்ல சாட்சி. அதனால் தான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் என்னைப் போல் யாரும் இருக்காதீங்க. படிக்க வேண்டும்.
சரண்யாவும் தமிழ் சினிமாவும்..
சரண்யா, மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 1980களில் சில திரைப்படங்களில் நடித்திருந்த சரண்யா எட்டு ஆண்டுகள் ஓய்வு பெற்றிருந்தார். பின்னர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில், பெரும்பாலும் நாயகர்களின் அன்னை வேடத்தில், நடிக்கத் தொடங்கினார். ராம் (2005), தவமாய் தவமிருந்து (2005), எம்டன் மகன் 2006 மற்றும் களவாணி (2010) போன்ற படங்களில் அவரது நடிப்பு வெகுவாகப் புகழப்பட்டது. சிறந்த குணச்சித்திர நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் வழங்கும் இரு விருதுகளும் கிட்டின. 2010ஆம் ஆண்டுக்கான இந்தியத் தேசியத் திரைபட விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை தென்மேற்குப் பருவக்காற்று என்ற திரைப்படத்திற்காகப் பெற்றுள்ளார்.