மேலும் அறிய

Nayanthara | நயன்தாரா மட்டுமில்லாம அட்லி - ஷாருக்கான் படத்துல இவங்களும் நடிக்கிறாங்களா? வாவ் அப்டேட்..!

அட்லி- ஷாருக்கான் படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகை இணைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் அட்லி. இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்து முன்னணி இயக்குநர் பட்டியலில் நுழைந்தார். அட்லி படங்களை இயக்குவது மட்டுமின்றி A for apple என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களைத் தயாரித்தும் வருகிறார். 

இதனையடுத்து இயக்குநர் அட்லி அடுத்ததாக கோலிவுட் படத்தை இயக்காமல் பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். இவர் ஷாருக்கானை வைத்து படம் ஒன்று இயக்கவுள்ளதாக நீண்ட நாட்களாக பேசப்படுகிறது. அதிலும் இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை நடிக்க வைக்க,  அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

இருப்பினும் இப்படம் குறித்து எந்த ஒரு அப்டேட் வெளியாகவில்லை என்றாலும், படக்குழு ப்ரீ புரோடுக்ஷன் வேலையில்  செம பிஸியாக ஈடுபட்டு உள்ளனர். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில்  என படக்குழு வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளன. 

ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் பாலிவுட் கிங் காங் என அழைக்கப்படும் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஒரு கேரக்டரில் நடிக்க சான்யா மல்ஹோத்ரா நடிக்கவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது. இவர் ஏற்கனவே ஆமீர்கானுடன் இணைந்து, தங்கல் படத்தில் நடித்திருந்தார். 

180 நாட்களில் படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடிக்க இயக்குநர் அட்லி முடிவு செய்து இருப்பதாகவும், பிரமாண்ட பட்ஜெட்டில் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் மட்டுமே நடித்து வரும் நயன்தாரா, இந்த படத்திற்குச் சம்மதம் தெரிவித்து விட்டால், நேரடியாக அவர் அறிமுகமாகும் முதல் பாலிவுட் படம்  இதுவாகும். அதேபோல் நயன்தாரா ஏற்கனவே அட்லி இயக்கிய, ராஜா ராணி, பிகில் ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கிட்ட தட்ட இரண்டு ஆண்டுகளாக அட்லி- ஷாருக்கான் படம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியான வண்ணம் உள்ளன. இறுதியாகச் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி படம் குறித்த அப்டேட் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நாளிலும் அப்டேட் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். விரைவில் படம் குறித்து எதாவது ஒரு அப்டேட்டை இயக்குநர் வெளியிடுவார் என அவரது ரசிகர்களால் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
Embed widget