"மன்மத லீலை” சம்யுக்தா ரசிகர்களுக்கு கொடுத்த ஸ்வீட் ஷாக்.. என்ன தெரியுமா?
அவர் தனது நண்பர்களுடன் பார்ட்டியில் இருக்கும் புகைப்படம் மற்றும் அது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
![actress samyuktha hegde party photos viral on social media](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/23/853177d70c3b389047f145c9748cc84c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
‘கோமாளி’ பட நடிகை சம்யுக்தா ஹெக்டே தனது பெஸ்ட் ஃப்ரெண்டின் பிறந்தநாள் விழாவில் மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே தமிழில் 'கோமாளி' படத்தில் ஜெயம் ரவியின் பள்ளி காதலியாக நடித்தார். ‘பப்பி’, ‘தேள்’ மற்றும் சமீபத்தில் வெங்கட் பிரபுவின் 'மன்மத லீலை' ஆகிய படங்களிலும் நடித்து ரசிகர்களால் ஈர்க்கப்பட்டார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா தனது ஹாட் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களால் அவரை பின்தொடர்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார். தற்போது, பெஸ்ட் ஃப்ரெண்டின் பிறந்தநாள் விழா ஒன்றில் சம்யுக்தா கலந்துகொண்டுள்ளார். அந்த விழா ஏதோ பாரில் நடந்துள்ளது. அவர் தனது நண்பர்களுடன் மது குடிபோதை போல இருக்கும் புகைப்படம் மற்றும் அது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலவிதமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
மன்மத லீலை சம்யுக்தா நடத்திய சமீபத்திய போட்டோஷூட் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அழகான நடிகை நீல நிற மைக்ரோ பிகினியில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. அதற்கு முன்பு நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதுவும் வைரலானது.
சம்யுக்தா தற்போது கன்னட படமான 'க்ரீம்' படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். அதே நேரத்தில் அவரது 'ராணா' மற்றும் 'துர்த்து நிர்கமானா' ஆகிய படங்கள் போஸ்ட் புரொடக்ஷனில் இருக்கின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)