Samantha Meets President: அட... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் சமந்தா... செர்பியாவில் சந்திப்பு எதற்காக?
நடிகை சமந்தாவும் நடிகர் வருண் தவானும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்தனர்.
சீட்டடெல் தொடரின் இந்தியப் பதிப்பு முழுவீச்சில் தயாராகி வருகிறது. நடிகை சமந்தா வருண் தவானுடன் இணைந்து இத்தொடரில் நடித்து வருகிறார்.
ஆங்கிலத்தில் ஏப்ரல் மாத இறுதியில் பிரியங்கா சோப்ரா - ரிச்சர்ட் மெய்டன் நடிப்பில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான தொடர், நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இத்தொடரின் இந்திய பதிப்பு தற்போது முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில், இதற்கான ஷூட்டிங் பணிகளில் நடிகை சமந்தா ஈடுபட்டு வருகிறார்.
இச்சூழலில் வருண் தவான், இயக்குநர்கள் ராஜ் அண்ட் டிகே உள்ளிட்ட சிட்டாடல் படக்குழுவினருடன் இணைந்து இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சமந்தா சந்தித்துள்ளார்.
இந்தப் புகைப்படங்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள பாலிவுட் நடிகர் வருண் தவான், “டீம் சீட்டடலுக்கு இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. செர்பியாவில் திரௌபதி முர்மு ஜியை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் வருண் தவானின் இந்தப் பதிவை சமந்தா தன் இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செர்பியா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரியங்கா - ரிச்சர்ட் மெய்டன் நடித்த சீட்டடெல் தொடரின் முந்தை ய பாகமாக சீட்டடெல் இந்தியப் பதிப்பு உருவாவதாக முன்னதாகத் தகவல்கள் வெளியாகின.
மேலும் சமந்தா பிரியங்காவுக்கு அம்மா கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் தோன்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஃபேமிலி மேன் தொடரின் இயக்குநர்களான ராஜ் அண்ட் டீகே இயக்கியுள்ள இந்த சீரிஸை எதிர்பார்த்து இந்திய ரசிகர்கள் காத்துள்ளனர்.
மற்றொருபுறம் சமந்தா விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்துள்ள குஷி படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
குஷி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ‘என் ரோஜா நீயா’ ஆகியவை வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இப்படம் வரும் செப்டெம்பர் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகி வரும் நிலையில், ஷிவ நிர்வாணா இப்படத்தை இயக்கி வருகிறார்.
மேலும் படிக்க: Por Thozhil Review: சீரியல் கில்லர் கதை...சீட்டின் நுனியில் உட்கார வைத்ததா? ’போர் தொழில்’ திரைப்படத்தின் முழு விமர்சனம்!