Samantha: ‘நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்’.. திடீரென்று சமந்தா போட்ட பதிவு.. என்ன காரணம் தெரியுமா?
நான் மகிழ்ச்சியானாலும் நன்றியினாலும் மூழ்கி இருக்கிறேன். உங்களின் விசில் சத்தங்களும், தியேட்டர்களில் நடந்த கொண்டாட்டங்களுமே இதற்கு சான்று! எங்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது.
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் யசோதா. யசோதா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை சமந்தா நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி மிக்க பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
🙇♀️🙇♀️🙇♀️#Yashoda pic.twitter.com/O6xdboY0AT
— Samantha (@Samanthaprabhu2) November 18, 2022
அன்புள்ள பார்வையாளர்களே,
யசோதா திரைப்படத்திற்கு நீங்கள் காட்டிய அன்பும்,தெரிவித்த பாராட்டுக்களும் எனக்கு மிகப்பெரிய பரிசும் ஆதரவும் அளித்துள்ளது. நான் மகிழ்ச்சியானாலும் நன்றியினாலும் மூழ்கி இருக்கிறேன். உங்களின் விசில் சத்தங்களும், தியேட்டர்களில் நடந்த கொண்டாட்டங்களுமே இதற்கு சான்று!.
எங்களின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது..நான் மிக்க மகிழ்ச்சியில் உள்ளேன். யசோதா திரைப்படத்தின் தயாரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் நான் இந்த தருணத்தில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். குறிப்பாக தயாரிப்பாளர் கிருஷ்ணா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில், என்னை நம்பியதற்காகவும், மேலும் இயக்குநர்கள் ஹரி மற்றும் ஹரீஷ் நான் கடமைப்பட்டுள்ளேன் அவர்களுடன் பணி புரிந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
மேலும் என் அன்புக்குரிய சக நடிகர்கள் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், மற்றும் பிற அற்புதமான நடிகர்களுக்கும்…. உங்களுடன் இணைந்து பணியாற்றுவது அருமையாக இருந்தது.
என்றும் பணிவுடனும் நன்றியுடனும்…
அன்புடன்,
சமந்தா.
இவ்வாறு அந்த பதிவில் நடிகை சமந்தா குறிப்பிட்டுள்ளார்.
யசோதா:
View this post on Instagram
ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில் ஹரி ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் 'யசோதா'. கர்ப்பமாக இருக்கும் சமந்தா எதிர்கொள்ளும் சவால்களே இப்படத்தின் கதைக்களம். படத்தின் டீசர். போஸ்டர், டிரெய்லர் என அனைத்துமே வெளியானது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வுமன் சென்ட்ரிக் திரைப்படமான யசோதா எதிர்பார்ப்பையும் தாண்டி சாதனை படைத்துள்ளது. வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வசூல் ரீதியாகவும் , விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.