மேலும் அறிய

Samantha: முன்னாள் கணவர் பெயர்கொண்ட டாட்டூவை அழிக்காமல் வைத்திருக்கும் சமந்தா... வைரலாகும் புகைப்படங்கள்!

நாகசைதன்யாவின் பெயர் கொண்ட ’சாய்’ எனும் டாட்டூவை இன்னும் அழிக்காமல் சமந்தா பேணி வருகிறார்.

நடிகை சமந்தா மணமுறிவுக்குப் பின்னும் தன் முன்னாள் கணவர் நாகசைதன்யாவின் பெயர் கொண்ட டாட்டூவை அழிக்காமல் உள்ளது கவனமீர்த்துள்ளது.

டோலிவுட் குயின்

’விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு பதிப்பான ’ஏ மாயா சேசாவே’ படத்தின் மூலம் டோலிவுட்டில் நடிகர் நாகசைதன்யாவுடன் 2010ஆம் ஆண்டு சமந்தா அறிமுகமானார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சமந்தா அறிமுகமான நிலையில், தன் முதல் பட நடிகர் நாகசைதன்யாவுடன் தொடர்ந்து நல்ல நட்புறவைப் பேணி வந்தார்.

தொடர்ந்து சமந்தா டோலிவுட்டில் பிரபல நடிகையாக உருவெடுத்த நிலையில், நாகசைதன்யாவுடன் அவர் காதலில் விழுந்ததாகத் தகவல்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து இருவரும் காதலை உறுதிசெய்ய 2017ஆம் ஆண்டு இருவரும் கோலாகலமாகத் திருமணம் செய்து கொண்டனர். 

4 ஆண்டு திருமண வாழ்க்கை

டோலிவுட் சினிமாவில் பெரிதும் ரசிக்கப்பட்டு கொண்டாடப்படும் ஆதர்ச ஜோடியாக இவர்கள் இருவரும் வலம் வந்த நிலையில், சமந்தா திருமணத்துக்குப் பின்னும் தொடர்ந்து நடித்து வந்தார்.

இந்நிலையில், 4 ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பிறகு சமந்தா - நாக சைதன்யா இருவரும் பிரிவதாக  சென்ற 2021ஆம் ஆண்டு அறிவித்து விவாகரத்து பெற்றனர்.

விவாகரத்துக்குப் பிறகு சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களுக்கும் கேலிக்கும் உள்ளான சமந்தா கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். மற்றொருபுறம் மயோசிட்டிஸ் நோயாலும் பாதிக்கப்பட்ட சமந்தா, தொடர்ந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றும் வந்தார்.

இதனிடையே புஷ்பா படத்தில் இவர் நடனமாடிய ’ஊ அண்டாவா பாடல்’ மிகப்பெரும் ஹிட் அடிக்க, மீண்டும் பழைய மோடுக்குத் திரும்பி, டோலிவுட், இந்தி, இணைய தொடர் என கலக்கி வருகிறார்.

அந்த வகையில் தற்போது சீட்டடெல் இணைய தொடரின் இந்தி பதிப்பில் நடிகர் வருண் தவானுடன் சமந்தா நடித்து வருகிறார். நடிகை பிரியங்கா சோப்ரா - நடிகர் ரிச்சர்ட் மேடன் நடித்துள்ள சீட்டடெல் தொடரின் ஆங்கிலப் பதிப்பு இன்னும் சில தினங்களில் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில், முன்னதாக இதற்கான ப்ரீமியர் நிகழ்வு லண்டனில் நடைபெற்றது. இந்த விழாவில் சமந்தா கலந்து கொண்டார். 

இந்த விழாவுக்கு சமந்தா அணிந்து வந்த கருப்பு நிற உடை பலரது கவனத்தையும் ஈர்த்ததுடன் சமந்தாவின் லுக் இணையத்தில் லைக்ஸ் அள்ளியது. இந்நிலையில், தன் மகிழ்வான கல்யாண வாழ்க்கையின்போது ‘சாய்’  எனும் தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் பெயர் கொண்ட டாட்டூவை சமந்தா பொரித்துக் கொண்ட நிலையில், இந்த விழாவுக்கு தன் டாட்டூ தெரிய அவர் உடை அணிந்து வந்தது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

 

நாகசைதன்யாவின் பெயர் கொண்ட டாட்டூவை இன்னும் அழிக்காமல் பேணி வருவதுடன், தன் பின் கழுத்துப் பகுதியில் YMC எனும் தன் டோலிவுட் அறிமுகப் படத்தின் டாட்டூவையும் சமந்தா பொரித்துள்ளார்.

இதே போல் நாகசைதன்யாவும் சமந்தாவும் தங்கள் திருமண வாழ்க்கையின்போது இரண்டு ஏரோக்கள் கொண்ட ஒரே மாதிரியான டாட்டூவை கைகளில் பொரித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

*சாந்தனு பாக்யராஜ் - சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை வெளியிட்ட ரஜினி
*சாந்தனு பாக்யராஜ் - சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை வெளியிட்ட ரஜினி
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Iran Announcement: ''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Embed widget