Samantha-kohli: புஷ்பா பாடலுக்கு நடனமாடிய கோலி... இன்ஸ்டா ஸ்டேட்டஸ் போட்டு மகிழ்ந்த சமந்தா..!
தன்னுடைய பாடலுக்கு கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடனமாடியது தொடர்பாக சமந்தா ஒரு பதிவை செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பெங்களூரு வீரர் மேக்ஸ்வேல் திருமண வரவேற்பில் நடனமாடியிருந்தார். அவர் புஷ்பா திரைப்படத்தில் வந்த பாடல் ஒன்றுக்கு நடனமாடியிருந்தார். அந்த நடனம் தொடர்பான வீடியோ வேகமாக வைரலானது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில் இந்த வீடியோவை நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸாக பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பதிவிட்டு ஆடுவது போல ஒரு ஸ்மைலியை பதிவிட்டுள்ளார். அத்துடன் விராட் கோலி மற்ரும் அனுஷ்கா சர்மாவின் கணக்கை டேக் செய்துள்ளார். அவரின் இந்த ஸ்டேட்டஸை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
முன்னதாக 2022 ஐபிஎல் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் மேக்ஸ்வெலுக்கு அந்த அணி நிர்வாகம் சார்பில் திருமண வரவேற்பு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மும்பையில் பயோ பபிள் முறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பெங்களூரு அணி வீரர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
Mood 😎 @imVkohli @RCBTweets #IPL #IPL2022 #ViratKohli #CricketTwitter #RCB #PlayBold pic.twitter.com/pWwYYSFFq0
— RCBIANS OFFICIAL (@RcbianOfficial) April 27, 2022
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விராட் கோலி, புஷ்பா படத்தில் வரும் “ஊ சொல்றியா” பாடலுக்கு நடனமாடி அசத்தி இருக்கிறார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுஷ்கா ஷர்மா, தனது பதிவில், கொரோனா பபுள் ஸ்பேசில் திருமண நிகழ்வில் கலந்து கொண்டேன். இந்த கொரோனா காலத்தில் பபுள் லைஃபில் நான் முடிந்தவரை எல்லா திருமண நிகழ்வுகளிலும் பங்கேற்று கொண்டாடி விட்டேன் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். மேலும், கோலியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்