Actress Rekha: 'பெண் செயலாளருடன் உறவு.. அதிரவைக்கும் நடிகை ரேகாவின் வாழ்க்கை வரலாறு புத்தகம்’..!
தமிழ் சினிமாவின் காதல் மன்னன் என கொண்டாடப்பட்ட ஜெமினி கணேசன் - நடிகை புஷ்பவல்லி தம்பதியினரின் மகளான பிரபல இந்தி நடிகை ரேகா, 1958 ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமானார்.
யாசீர் உஸ்மான் எழுதிய இந்தி நடிகை ரேகாவின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தையே அதிர செய்துள்ளது.
தமிழ் சினிமாவின் காதல் மன்னன் என கொண்டாடப்பட்ட ஜெமினி கணேசன் - நடிகை புஷ்பவல்லி தம்பதியினரின் மகளான பிரபல இந்தி நடிகை ரேகா, 1958 ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமானார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ‘பானுரேகா கணேசன்’. தொடர்ந்து 1969 ஆம் ஆண்டு அஞ்சனா சஃபர் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாகவும் சினிமா வாழ்வை தொடர்ந்தார். கிட்டதட்ட 180க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரேகா, பாலிவுட்டில் அதிக கிசுகிசுக்களில் சிக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்தார்.
குறிப்பாக நடிகர் அமிதாப்பச்சன் தொடங்கி சஞ்சய் தத் வரை பல பிரபலங்களுடன் இணைத்து பேசப்பட்ட அவர், பாலிவுட்டின் மிகவும் அழகான நடிகைகளில் முதலிடத்தில் உள்ளார். ரேகாவுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் 1990 ஆம் ஆண்டு தொழிலதிபர் முகேஷ் அகர்வாலை திருமணம் செய்தார். ஆனால் முகேஷ் அடுத்த சில மாதங்களிலேயே தற்கொலை செய்து கொண்டார்.
ராஜ்யசபா உறுப்பினராக பதவி வகித்துள்ள ரேகா, 2010 ஆம் ஆண்டால் மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதுக்கு அவரது கலைச்சேவையை பாராட்டி வழங்கப்பட்டது. இப்படியான நிலையில் யாசீர் உஸ்மான் எழுதிய இந்தி நடிகை ரேகாவின் வாழ்க்கை வரலாறு புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ரேகா : தி அன்டோல்ட் ஸ்டோரி’ என பெயரிடப்பட்ட இந்த புத்தகத்தில், ரேகாவின் தனிப்பட்ட பல விஷயங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ரேகா குடும்பம் 1968 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் நிதி சிக்கல்களை எதிர்கொண்டபோது, விரும்பம் இல்லை என்றாலும் அவர் நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.
அதேசமயம் அவர் தனது தனிப்பட்ட பெண் செயலாளராக ஃபர்சானாவுடன் உறவில் இருந்ததாகவும், ரேகா தனது படுக்கையறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட ஒரே நபர் அவர் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் ஒன்றாக இருந்து வருவதாகவும். ஃபர்சானா இல்லாமல் சிறிது நேரம் கூட ரேகா இருக்க மாட்டார். அதேசமயம் ரேகாவின் கணவர் முகேஷின் தற்கொலைக்கு ஃபர்சானாவும் காரணம் என அதிரவைக்கும் பல தகவல் இடம் பெற்றுள்ளது. ரேகாவின் வாழ்க்கையிலும் சரி, வீட்டிலும் சரி நுழைபவர்கள் ஃபர்சானாவால் கண்காணிக்கப்படுகிறார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.