![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Actress regina cassandra: ”ஆண்களும் மேகி நூடுல்ஸூம் ஒன்று”... ஆபாசமாக கமெண்ட் செய்த நடிகை ரெஜினா
ரெஜினா சர்ச்சைகளில் சிக்குவது ஒன்றும் புதிது அல்ல. துணிச்சலாக பேசுவதாக கூறி பல இடங்களில் சர்ச்சையாக பேசியுள்ளார்.
![Actress regina cassandra: ”ஆண்களும் மேகி நூடுல்ஸூம் ஒன்று”... ஆபாசமாக கமெண்ட் செய்த நடிகை ரெஜினா Actress regina cassandra controversial speech about mens Actress regina cassandra: ”ஆண்களும் மேகி நூடுல்ஸூம் ஒன்று”... ஆபாசமாக கமெண்ட் செய்த நடிகை ரெஜினா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/11/8d95226998b360a72783f81c807a7d591662882315918224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆண்களை மேகி நூடுல்ஸூடன் நடிகை ரெஜினா ஒப்பிட்டு பேசியுள்ளது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
View this post on Instagram
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை ரெஜினா கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மாநகரம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன், நெஞ்சம் மறப்பதில்லை, மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். தற்போது சூர்ப்பநகை பார்டர் உள்பட படங்களில் நடித்து வருகிறார்.
View this post on Instagram
அப்படியே தெலுங்கு பக்கம் சென்ற அவருக்கு அங்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் 15 ஆம் தேதி ஷாகினி டாகினி என்கிற படத்தில் நடிகை நிவேதா தாமஸ் உடன் இணைந்து நடித்துள்ளார். அந்த படத்தின் புரோமோஷனுக்காக இருவரும் பல நேர்காணல்களில் பங்கேற்றனர். அதில் ஒரு நேர்காணலில் அடல்ட் ஜோக் சொல்வதாக கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
Mass🔥 attitude with cute looks👰🏻🧛♀️@ReginaCassandra @i_nivethathomas ❤️❤️ pic.twitter.com/frYqmRkvop
— Gwri (@prettyGowri) September 9, 2022
அந்த நேர்காணலில் நிவேதா, ரெஜினா இருவரும் சாப்பிட்டு கொண்டே தொகுப்பாளரின் கேள்விக்கு பதில் அளிக்கிறார்கள். அப்போது ரெஜினா, ஆண்களும் மேகி நூடுல்ஸூம் ஒன்று தான். இரண்டுமே 2 நிமிடங்கள் தான் என சொல்லி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ரெஜினா சர்ச்சைகளில் சிக்குவது ஒன்று புதிது அல்ல. துணிச்சலாக பேசுவதாக கூறி பல இடங்களில் சர்ச்சையாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)