Reba Monica John Wedding: கொரோனால.! அதான் கூட்டம் சேர்க்கல! சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த பிகில் நாயகி!
இந்த ஜோடிக்கு ரசிகர்கள், திரையுலகினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
விஜயுடன் பிகில் படத்தில் நடித்த நடிகை ரெபா மோனிகா தன்னுடைய ஆண் நண்பரை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பிகில் படத்தில் நடித்து கவனம் பெற்றவர் மலையாள நடிகை ரெபா மோனிகா ஜான். இவர் ஹரிஷ் கல்யாணுடன் 'தனுஷ ராசி நேயர்களே' திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் தனது ஆண் நண்பரான ஜியோமோன் ஜோசப்பை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயம் ஒன்றில் எளிமையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் முக்கியமான நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிக கூட்டமில்லாமல் எளிமையாக திருமணம் முடிந்ததாக கூறப்படுகிறது.
View this post on Instagram
ரெபாவின் திருமண புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் ஷேர் ஆகி வருகின்றன. இந்த ஜோடிக்கு ரசிகர்கள், திரையுலகினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த வருடம் பிப்ரவரி 4ம் தேதி ரெபாவின் பிறந்தநாளன்று தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார் ஜியோமோன். ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் மூழ்கிய ரெபா காதலை ஏற்றுக்கொண்டார்.
View this post on Instagram
2016ம் ஆண்டு மலையாளத்தின் ஜேக்கபின்டே சொர்க்கராஜ்யம் திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார் ரெபா. அதன் பின்னர் ஜருகண்டி, பிகில் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஷ்ணு விஷாலுடன் நடித்துள்ள 'FIR'திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது
View this post on Instagram