மேலும் அறிய

Mysaa: ரத்தம் சொட்டா சொட்ட... பார்வையால் மிரளவைத்த ராஷ்மிகா மந்தனா! வெளியானது 'மைசா ' ஃபர்ஸ்ட் லுக்!

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கும், புதிய பான் இந்தியா திரைப்படமான “மைசா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில், கடந்த வாரம் ரிலீஸ் ஆன திரைப்படம் 'குபேரா'. இந்த படம் வெளியான ஒரே வாரத்திற்குள் ரூ.100 கோடி வசூல் சாதனை செய்தது. இதை தொடர்ந்து, தற்போது நடிகை ராஷ்மிகா கதையின் நாயகையாக நடிக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு பர்ஸ்ட் லுக்குடன் வெளியாகி உள்ளது.

அட்டகாசமான  ஆக்‌ஷன் அவதாரத்தை  வெளிக்காட்டிய இந்த போஸ்டர், தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்திற்கு“மைசா” என பெயரிட்டுள்ளனர் படக்குழுவினர்.

இந்த படத்தை பிரபல  இயக்குநர் ஹனு ராகவபுடியின் உதவியாளராக பணியாற்றிய ரவீந்திர புள்ளே இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். Unformula Films நிறுவனம் இந்தப் படத்தை மிகப்பெரிய  பட்ஜெட்டில், பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் தயாரிக்க உள்ளது. அஜய் மற்றும் அனில் சாய்யபுரெட்டி தயாரிக்கும் இப்படத்தில், இணைத் தயாரிப்பாளராக சாய் கோபா பணியாற்றுகிறார்.


Mysaa: ரத்தம் சொட்டா சொட்ட... பார்வையால் மிரளவைத்த ராஷ்மிகா மந்தனா! வெளியானது 'மைசா ' ஃபர்ஸ்ட் லுக்!

நேற்றைய அட்டகாசமான அறிவிப்பு போஸ்டரைத் தொடர்ந்து,  இந்த திரைப்படத்தின் தலைப்பும், ராஷ்மிகாவின் மிரட்டலான  லுக்குடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை, சில முன்னணி நடிகர்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி தெலுங்கில், இயக்குநர் ஹனு ராகவபுடி வெளியிட, தமிழில் தனுஷ் வெளியிட்டார். ஹிந்தியில் நடிகர் விக்கி கௌஷல் வெளியிட மலையாளம் மற்றும் கன்னடத்தில் துல்கர் சல்மான் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் இந்த போஸ்டர்களை வெளியிட்டனர்.

மைசா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், ராஷ்மிகா  ஒரு புடவையில், பழங்குடி நகைகள் மற்றும் மூக்குத்தியுடன் காட்சியளிக்கிறார். இப்படம் கோண்ட் பழங்குடியினத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தோற்றத்தில் முற்றிலும் புதிய மற்றும் திகிலூட்டும் முகபாவனையுடன் காட்சியளிக்கிறார். ரத்தம் சொட்ட சொட்ட, கைப்பிடியில் மர்மப் பொருளை பிடித்தபடி, பார்வையாலேயே மிரட்டுகிறார்.

இயக்குநர் ரவீந்திர புள்ளே,  படம் குறித்து பேசும்போது…. “மைசா இரண்டு வருடங்கள் உழைத்து உருவாக்கிய திரைப்படம். இப்படத்தின் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்துள்ளோம், கதை, கதாபாத்திரங்கள், கலை நுணுக்கம் என அனைத்தும் ரசிகர்களைக் கவரும். இப்போது, இந்தக் கதையை உலகிற்கு சொல்லத் தயாராக இருக்கிறோம்.”

கோண்ட் பழங்குடியினரின் சுவாரஸ்யமான உலகத்தை மையமாகக் கொண்ட மிகவும் உணர்ச்சிகரமான ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் இது என தெரிவித்துள்ளார். ராஷ்மிகா கதையின் நாயகியாக நடிக்கும் முதல் படத்திலேயே ஆக்ஷன் நாயகியாக கலக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget