Rashi Khanna : ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட ராஷி கண்ணா..நடிகையானதற்கு இதுதான் காரணமா..
ஏபிபி நெட்வொர்க் நடத்தும் இரண்டாவது 'தி சதர்ன் ரைசிங் மாநாட்டில் கலந்துகொண்ட நடிகை ராஷி கண்ணா ஐஏஎஸ் ஆபிஸர் ஆக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டு பின் நடிக்க வந்த பின்னணியை பகிர்ந்துகொண்டார்
ஏபிபி 'தி சதர்ன் ரைசிங் மாநாடு 2024'
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து வரும் ஏபிபி நெட்வொர்க் நடத்தும் இரண்டாவது 'தி சதர்ன் ரைசிங் மாநாடு 2024' தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியால் இன்று காலை தொடங்கி வைக்கபட்டது. முதன்முறையாக கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்றது.அதன் தொடர்ச்சியாக, ஏபிபி நெட்வர்க்கின் நடப்பாண்டிற்கான சதர்ன் ரைசிங் மாநாடு இன்று ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அரசியல், கலை, சினிமா, விளையாட்டு என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் இறுதி பேச்சாளராக நடிகை ராஷி கண்ணா கலந்துகொண்டார். தனது தனிப்பட்ட வாழ்க்கை , பாலிவுட் சினிமா மீதான விமர்சனங்கள் , அரசியல் என பல்வேறு விஷயங்களைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்தார் ராஷி கண்ணா.
ஐ.ஏஸ் ஆக ஆசைப்பட்ட ராஷி கண்ணா
"நான் ஸ்கூல் காலேஜில் படிப்பாளியாக இருந்தேன். என் அப்பாவுக்கு நான் ஐஏ.ஏஸ் ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது. நானும் எனக்கு படிப்பில் ஆர்வம் அதிகம் என்பதால் ஐ.ஏ.எஸுக்காக படித்துக் கொண்டிருந்தேன். நண்பர் ஒருவருடன் மும்பை சென்றிருந்தபோது எனக்கு முதல் படத்தின் ஆடிஷனுக்கான அழைப்பு வந்தது. நான் சில முறை மறுத்தும் எனக்கு அழைப்பு வந்தது. பின் ஒருவர் ஃபோன் செய்து இத்தனை முறை கூப்பிட்ட மரியாதைக்காவது ஒரு முறை வந்து ஆடிஷன் கொடுத்துவிட்டு மட்டும் போக சொன்னார். நாம் செலக்ட் ஆகவாப்போறோம் என்று ஆடிஷன் குடுத்திட்டு வந்தேன். நான் செலக்ட் ஆகிவிட்டேன். ஆனால் நான் ஐ.ஏ.எஸ் ஆகவேண்டு என்கிற கனவு அப்படியே நின்றுவிட்டது. எனக்கு பிடித்த வாக்கியம் ஒன்று இருக்கிறது 'Fate Leads the Willing and Drags the Reluctant' என்று. விதிகிட்ட நான் சரண்டர் ஆக தயாராக இருந்தேன். சினிமா எனக்கு ஈஸியாக கிடைத்திருக்கலாம் இது தான் உலகத்திலேயே மிக நிலையே இல்லாத வேலை. சில நேரம் உங்களுக்கு அடுத்த படத்திற்கான வாய்ப்பு எப்போது வரும் என்று தெரியாது. மாதக்கணக்கில் எந்த வேலையும் இல்லாமல் காத்திருக்க வேண்டும். எனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்புகளையும் பயண்படுத்தி தான் இந்த இடத்திற்கு உங்கள் முன் வந்திருக்கிறேன். " என்று ராஷி கண்ணா பேசினார்.