தமிழ் பட நடிகைக்கு ரூ.102 கோடி அபராதம்.. பெட்டி பெட்டியாக தங்கம்.. வீட்டில் கிடைத்த ஆதாரம்!
தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகைக்கு பல கோடி கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டது.

வாகா படத்தில் நடித்த நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்தபோது பெங்களூர் விமான நிலையத்தில் கையும் களவுமாக சிக்கினார். இவர் இதுபோன்று பலமுறை தங்கம் கடத்தலில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கடத்தலில் பலருடன் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பெங்களூரில் உள்ள நடிகை ரன்யா ராவ் வீட்டில் சோதனையிட்டனர்.
இதில், ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.3 கோடி பணம் மற்றும் ரூ.17 கோடி மதிப்பிலான சொத்துக்களின் ஆவணங்களையும் கைப்பற்றினர். தங்க கடத்தல் மற்றும் பண முறைகேடு நடந்திருக்க கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் வழக்குப்பதிவு செய்து ரன்யா ராவை போலீசார் கைது செய்தனர். மேலும், நடிகை ரன்யா ராவ் மீது அன்னிய செலாவணி மற்றும் கடத்தல் மீறல்கள் தொடர்பான காபிபோசா சட்டம் பாய்ந்தது. இதனால், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
தற்போது சிறையில் இருக்கும் நடிகை ரன்யாவுக்கு மிகப்பெரிய தொகை அபாரதம் விதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் புலனாய்வு இயக்ககம் நடத்திய முழு விசாரணையில் ரன்யா ராவ் தங்கம் கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு சுமார் ரூ.102.55 கோடி அபராதம் விதித்து அதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பது கன்னட திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் நடிகை ரன்யா ராவுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட மற்ற 3 பேருக்கு ரூ.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தங்கம் கடத்தல் வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக 2,500க்கும் மேற்பட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபாரதம் செலுத்தாவிட்டால் நடிகை ரன்யா ராவுக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















