Actress Radha : பிகினி உடையில் அனுபவித்த சிரமம்... த்ரோபேக் ஃபோட்டோவுடன் மெமரீஸ் பகிர்ந்த ராதா..
டிக் டிக் டிக் படத்தில் பிகினி உடையில் இருக்கும் த்ரோபேக் புகைப்படத்துடன் பழைய நினைவுகளை பகிர்ந்த நடிகை ராதா.
80-களில் முன்னணி நடிகையாக தென்னிந்திய சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியவர் நடிகை ராதா நாயர். அடுத்தடுத்து ஹிட் படங்களாக கொடுத்து சூப்பர் ஸ்டார் நடிகையாக தன்னை திரைப்பட துறையில் நிலைநிறுத்தி கொண்டார். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், விஜயகாந்த், மோகன், கமல், கார்த்திக், சத்யராஜ் என அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த அனைவருடன் டூயட் பாடியுள்ளார்.
த்ரோபேக் போட்டோ:
சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை ராதா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் நடிகை ராதா தனது த்ரோபேக் போட்டோ ஒன்றை பகிர்ந்து அது குறித்த தனது நினைவலைகளை பகிர்ந்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான டிக் டிக் டிக் திரைப்படத்தில் நடிகை ராதா பிகினி உடையில் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
பிகினி மெமரிஸ் :
அந்த காலகட்டத்தில் பிகினி உடையில் திரையில் நடிப்பது என்பது ஒரு நடிகைக்கு அவ்வளவு எளிதான ஒரு விஷயம் அல்ல. இது குறித்த ராதாவின் பதிவில் "டிக் டிக் டிக் படத்தின் படப்பிடிப்பு சமயத்தை நினைவூட்டும் அழகான மெமரிஸ்களில் ஒன்று. அந்த சமயத்தில் என்னுடைய வேலைகளில் இது ஒரு பகுதியாக இருந்து இருக்கலாம். ஆனால் அதை திரும்பி பார்த்தால் அதுபோல கேஷுவலாக காண்பிக்க நாங்கள் பட்ட போராட்டங்களுக்கும் வலிமைக்கும் பாராட்டுக்கள். குறிப்பாக அது போல சாதாரணமான முகத்துடன் போஸ் கொடுத்த மாதவிக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள். உடலுடன் சேர்த்து அட்டிடியூட்டாக ஒத்துழைத்து நடித்ததற்கு மாதவிக்கு ஹாட்ஸ் ஆஃப்.
ஒரு சில நினைவுகள் இப்போது வரும்போது சொல்லமுடியாத பல எண்ணங்கள் தோன்றுகின்றன. அவற்றைத்தான் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு சிறந்த கைகளில் நாங்கள் சேர்க்கப்பட்டு எங்களுக்கு இந்த அழகான ஆடைகளை வடிவமைத்து கொடுத்ததற்கு வாணி கணபதிக்கு நன்றிகள். எனது சக நடிகைகள் மாதவி மற்றும் ஸ்வப்னாவுடன் போஸ் கொடுக்க, எங்களின் முன்னால் உட்கார்ந்து இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
கமெண்ட்களில் பாராட்டை குவித்த ரசிகர்கள் :
ராதாவின் இந்த போஸ்டிற்கு ஏராளமான ரசிகர்கள் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை குவித்துள்ளனர். "சினிமாவின் பொற்காலத்தில் போல்ட் அண்ட் பியூட்டிஃபுல்! உங்கள் அனைவருக்கும் மற்றும் கமல்ஹாசனின் அந்த கூல் லூக்கிற்கு ஹாட்ஸ் ஆஃப்! என கமெண்ட் செய்துள்ளார் ஒரு ரசிகர். பலர் அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தனர். அந்த காலகட்டத்தில் சிறப்பாக நடித்து இருந்தீர்கள்! எனவும் போஸ்ட் செய்து இருந்தனர்.
1981ம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் டிக் டிக் டிக். இதில் நடிகர் கமல்ஹாசன், மாதவி, ஸ்வப்னா மற்றும் ராதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சூப்பர் ஹிட் படமாக வெற்றிபெற்ற டிக் டிக் டிக் திரைப்படம் பின்னர் ஹிந்தியிலும் கரிஷ்மா என்ற பெயரில் ரீ மேக் செய்யப்பட்டது.