Watch Video: வடிவேலு டயலாக்.. க்யூட் ரியாக்ஷன்.. மனதை கொள்ளையடித்த பிரியங்கா வீடியோ..
பிரியங்கா, அவ்வப்போது சமூகவலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
![Watch Video: வடிவேலு டயலாக்.. க்யூட் ரியாக்ஷன்.. மனதை கொள்ளையடித்த பிரியங்கா வீடியோ.. Actress Priyanka Mohan latest video goes viral Watch Video: வடிவேலு டயலாக்.. க்யூட் ரியாக்ஷன்.. மனதை கொள்ளையடித்த பிரியங்கா வீடியோ..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/28/10085fac9524ffda120129e6e74bc5db_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தெலுங்கில் வெளியான நானியின் ‘கேங் லீடர்’ படத்தில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் பிரியங்கா மோகன். தமிழில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தில் அறிமுகமாகி தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.
View this post on Instagram
அவர் அண்மையில் சூர்யா நடிப்பில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்தார்.இவரின் நடிப்பில் அடுத்ததாக சிவகார்த்திகேயனின் டான் படம் வெளியாக உள்ளது. இதன் மூலம் இராண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, அவ்வப்போது சமூகவலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
View this post on Instagram
தற்போது மிகவும் சீரியஸாக போட்டோஷூட்களை களமிறக்கி வைரலாகி வருகிறார் பிரியங்கா. இந்நிலையில் அவர் போட்டோஷூட்டின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை ரீல்சாக வெளியிட்டுள்ளது இன்ஸ்டா பக்கம் ஒன்று. வடிவேலு டயலாக், பிரியங்காவின் க்யூட் ரியாக்ஷன்ஸ், டாக்டர் பட டயலாக் என பக்கா ரீல்சாக வைரலாகி வருகிறது. பிரியங்காவின் ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து ரசித்து வருகின்றனர்.
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)