Watch Video : பிரியா ஆனந்தை சீண்டிவிட்டது யார்...பிகினியில் வீடியோ வெளியிட்டு ஷாக்
Priya Anand. : நடிகை பிரியா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராமில் பிகினி உடையில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் பேசு பொருளாகியுள்ளது

பிரியா ஆனந்த்
வாமனன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியா ஆனந்த். தமிழ்நாட்டைச் சேர்ந்த அவர், முதலில் புகைப்படம் என்னும் படத்தில் நடித்தார். அப்படம் ரிலீசாக தாமதமானதால் வாமனன் முதலில் வெளியாகி பிரியா ஆனந்துக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து 180, எதிர்நீச்சல், அரிமா நம்பி, இரும்புக்குதிரை, வணக்கம் சென்னை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை, முத்துராமலிங்கம், கூட்டத்தில் ஒருவன், எல்.கே.ஜி, ஆதித்ய வர்மா, காசேதான் கடவுளடா , அந்தகன் ஆகிய படங்கள் தமிழில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ள பிரியா ஆனந்த்,
நடிக்க வந்து 15 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், பிரியா ஆனந்த இளம் நடிகர்களுடன் மட்டுமே ஜோடியாக நடித்திருந்தார். முன்னணி ஹீரோக்கள் படங்களில் அவர் நடிக்காதது ரசிகர்களிடையே ஒருவித சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. சமீபத்தில் இவர் நடித்து நீண்ட நாள் கிடப்பில் இருந்த சுமோ திரைப்படம் வெளியாகி கவனமீர்க்க தவறியது.
பிகினியில் வீடியோ வெளியிட்ட பிரியா ஆனந்த்
தற்போது 38 வயதை எட்டியுள்ள பிரியா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படங்களில் பெரியளவில் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த பிரியா ஆனந்த் திடீரென்று இந்த வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
View this post on Instagram





















