Nayanthara: மகாராஜா இயக்குநருடன் கைகோர்க்கும் நயன்தாரா... டைட்டில் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க
மகாராஜா படத்தின் வெற்றிக்குப் பின் இயக்குநர் நிதிலன் ஸ்வாமிநாதன் நடிகை நயன்தாரா நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
நிதிலன் ஸ்வாமிநாதன்
விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா (Maharaja) படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விஜய் சேதுபதி, மம்தா மோகன் தாஸ், அனுராக் கஷ்யப், அபிராமி, பாரதிராஜா, நட்டி, முனிஷ்காந்த், அருள்தாஸ், சிங்கம் புலி, பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக உருவாகியுள்ள மகாராஜா திரைப்படம், ரசிகர்களிடம் பாராட்டுக்களையும் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலையும் வாரி குவித்து வருகிறது. இப்படத்தின் மூலம் வெகுஜன மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன்.
கடந்த 2017ஆம் ஆண்டு பாரதிராஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த குரங்கு பொம்மை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் நிதிலன் ஸ்வாமிநாதன். வெறும் 1 மணி நேரம் 40 நிமிடங்களே நீளம் கொண்ட இந்தப் ப இந்தப் படத்தின் மூலம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் கவனமீர்த்தார்நித்திலன் சுவாமிநாதன். இவர் முன்னதாக நாளைய இயக்குநர் மூன்றாவது சீசனில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். இதில் இறுதிச் சுற்றில் இவர் இயக்கிய “புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்” என்ற படம் நாளைய இயக்குநர் டைட்டில் பரிசை வென்றது. மகாராஜா படத்திற்கு பின் இந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார். இவரது அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இப்படியான நிலையில் நிதிலன் ஸ்வாமிநாதன் அடுத்தபடியாக நடிகை நயன்தாரா வைத்து படம் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராணி
Director Nithilan who has given recent Blockbuster #Maharaja, is doing his next movie with #Nayanthara 🎬
— AmuthaBharathi (@CinemaWithAB) August 12, 2024
Titled as '#Maharani'
Produced by Passion studios !!
©️VP pic.twitter.com/4pTJAr5n8q
நடிகை நயந்தாரா நடிக்கும் இப்படத்திற்கு மகாராணி என்று டைட்டில் வைக்கப் பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை விரைவில் எதிர்பார்க்கலாம். ஏற்கனவே பல்வேறு படங்களை கையில் வைத்திருக்கும் நயன்தாரா அந்த வேலைகளை எல்லாம் முடித்தபின் இப்படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.