Actress Mouni Roy: நாகினி நடிகை மெளனியின் நறுக்குனு 8 போட்டோ! பரபரக்கும் இன்ஸ்டா!
மௌனி ராய் மற்றும் சூரஜ் நம்பியார் திருமணம் முடிந்த கையோடு காஷ்மீர் சென்று ஹனிமூனை கொண்டாடினர்.
நாகினி' சீரியல் மூலம் பிரபலமானவர் இந்தி நடிகர் மௌனி ராய். இவர் தனது நீண்டநாள் பாய்பிரண்டான சுராஜ் நம்பியாரை கடந்த ஜனவரி மாதம் 27 ம் தேதி கோவாவில் திருமணம் செய்து கொண்டார். பாலிவுட் மட்டும் அல்லாது தமிழ்நாடு வரை இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.
கடந்த ஆண்டு, நடிகை மௌனி ராய் துபாய் தொழிலதிபர் சூரஜ் நம்பியாருடன் காதல் உறவில் இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால், அப்பொழுது இதுகுறித்து எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. தொடர்ந்து, இருவரும் அவ்வபோது தங்களின் காதலில் வெளிப்பாடாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வந்தனர்.
View this post on Instagram
இந்நிலையில், இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில் அந்த புகைப்படங்கள் இந்தியா முழுவதும் படு வைரலானது. மௌனி ராய் மற்றும் சூரஜ் நம்பியார் திருமணம் முடிந்த கையோடு காஷ்மீர் சென்று ஹனிமூனை கொண்டாடினர்.இந்நிலையில் இன்ஸ்டாவில் செம ஆக்டீவாக இருக்கும் மெளனி தன் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை தற்போது பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram