Actress Meena: மீண்டும் திரையில் தோன்ற தயாரான மீனா.. வைரலாகும் வீடியோ..ரசிகர்கள் மகிழ்ச்சி
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக திகழும் மீனா நீண்ட இடைவெளிக்குப் பின் விளம்பரம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக திகழும் மீனா நீண்ட இடைவெளிக்குப் பின் விளம்பரம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி ரஜினி,கமல்,விஜயகாந்த்,சத்யராஜ், அஜித் என பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்தவர் நடிகை மீனா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்த அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
இதனிடையே நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் 28 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகினர், ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து வெளியே தலைக்காட்டாமல் இருந்த நடிகை மீனாவை நடிகைகள் சங்கீதா, ரம்பா, சங்கவி ஆகியோர் தங்களது குடும்பத்துடன் சென்று சந்தித்தனர்.
View this post on Instagram
இதனைத் தொடர்ந்து மகள் நைனிகாவுக்காக மீனாவை 2வது திருமணம் செய்ய சொல்லி அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. இதனை மறுத்த மீனா, நான் இந்த வதந்திகளை பற்றி எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் மீனா விளம்பரம் படமொன்றில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக மேக்கப் போட்டு தயாராகும் வீடியோவை நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள மீனாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.