Madona Sebastian : மடோனா செபஸ்டியனுக்கு வந்த சோதனையப் பாருங்க...வைரலாகும் டபுள் மீனிங்க் பாடல்
பிரபுதேவா , மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள ஜாலியோ ஜிம்கானா படத்தின் பாடல் வரிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பிரபு தேவா மடோனா செபாஸ்டியன் நடிக்கும் ஜாலியோ ஜிம்கானா
பிரபுதேவா மற்றும் மடோனா செபாஸ்டியன் இணைந்து நடித்துள்ள படம் ஜாலியோ ஜிம்கானா. அபிராமி , யோகிபாபு உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சார்லீ சாப்ளின் , கோவை பிரதர்ஸ் , மகா நடிகன் , இனிது இனிது காதல் இனிது , இங்லீஷ்காரண் உள்ளிட்டபடங்களை இயக்கிய சக்தி சிதம்பரம் சக்தி சிதம்பரம் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். வரும் நவம்பர் 30 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
வைரல் ஆகும் போலீஸ்காரன கட்டிகிட்டா பாடல்
ஜாலியோ ஜிம்கானா படத்தில் இருந்து நேற்று அக்டோபர் 25 ஆம் தேதி 'போலீஸ்காரன கட்டிகிட்டா' பாடல் வெளியானது. இந்தப்பாடல் வெளியான சில மணி நேரங்களில் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. இதற்கு காரணம் பாடல் வரிகளே. படத்தின் இயக்குநர் சக்தி சிதம்பரமே இந்த பாட்டை எழுதியுள்ளார். இந்த பாட்டில் ' போலீஸ்காரனகிட்ட கட்டிகிட்டா லத்தி வச்சு அடிப்பான். டாக்டர கட்டிகிட்டா ஊசி வச்சு குத்துவான்" என இரட்டை ஆர்த்த வரிகள் இடம்பெற்றுள்ளன. வழக்கம்போல சிலர் இந்த பாடலை ஒரு கலாச்சார கேடாக பார்க்கிறார்கள். இன்னொரு தரப்பினர் எங்களுக்கு ஜாலியா இருக்கு என்று சொல்கிறார்கள்.
ஊ சொல்றியா மாமா பாடலைப் போல் ஒரு பாடலை உருவாக்குவது தான் இயக்குநரின் டார்கெட் போல . அதனால் தான் இந்தப்பாடலையும் ஆண்டிரியாவை வைத்தே பாட வைத்துள்ளார். பாட்டு நன்றாக இருக்கோ இல்லையோ வைரலாவதற்கான எல்லா தகுதிகளும் இந்த பாட்டிற்கு இருக்கின்றன.
Actress Madonna Sebastian About #JollyOGymkhana #PoliceKaaranaKattikitta
— Trendswood (@Trendswoodcom) October 26, 2024
Song Link : https://t.co/Ge57CX0GeG
Music : Ashwin Vinayagamoorthy
Vocals : Andrea
Prabhu Deva - Shakthi Chidhambarampic.twitter.com/zhvMz1R0kI
என்ன கொடும சரவணன் இது
மற்றொரு பக்கம் மடோனா செபாஸ்டியன் ரசிகர்கள் தலையில் அடித்துக்கொண்டு என்ன கொடும சரவணன் இது என்கிற மூடிற்கு ஆளாகிவிட்டார்கள். பிரேமம் , காதலும் கடந்து போகும் போன்ற க்யூட்டான படங்களில் நடித்த மடோனா செபாஸ்டியனா இந்த மாதிரி ஒரு பாட்டில் ஆடுவது என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.