மேலும் அறிய

Khushbu Sundar: குஷ்புவின் உடல்நலன் பாதிப்பு...சிகிச்சை பெற்றபடி செல்ஃபி... கவலை தெரிவிக்கும் ரசிகர்கள்!

முன்னதாக தன் ட்விட்டர் தளத்தில் புகைப்படத்துடன் குஷ்பு இதுகுறித்து பதிவிட்ட நிலையில்,  ரசிகர்கள் கவலை தெரிவித்தும், அவர் விரைந்து உடல்நலன் தேற வாழ்த்தியும் வருகின்றனர்.

முதுகெலும்பு தொடர்பான பிரச்னையால் பாதிக்கப்பட்ட நடிகை குஷ்பு முன்னதாக மருத்துவமனையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பொதுவான சினிமா நடிகைகளுக்கான இலக்கணத்துள் அடங்காத உடல்வாகுடன், 80களின் இறுதியில் தொடங்கி தமிழ் சினிமாவில் கோலோச்சி,அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தவர் நடிகை குஷ்பு.

தமிழ், தெலுங்கு, இந்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்து கோலோச்சி வந்த குஷ்புவை, அவரது கரியரின் உச்ச காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். தற்போது பாஜகவில் இணைந்து செயல்பட்டு வரும் குஷ்பு அரசியல், சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இச்சூழலில டெய்ல் போன் எனப்படும் முதுகெலும்பின் முடிவில் உள்ள பாகத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று குஷ்பு வீடு திரும்பியுள்ளார்.

இது குறித்து முன்னதாக தன் ட்விட்டர் தளத்தில் புகைப்படத்துடன் குஷ்பு பதிவிட்ட நிலையில், கமெண்ட் செக்‌ஷனில் அவர் விரைந்து உடல்நலன் தேற வாழ்த்தியும், குஷ்புவுக்கு இப்படி ஆயிற்றே எனக் கவலை தெரிவித்தும் வருகின்றனர் ரசிகர்கள்.

இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சியை 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு தமிழ்நாட்டு மருமகளாக செட்டிலான குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

View this post on Instagram
 
A post shared by Kushboo Sundar (@khushsundar)

தமிழ் சினிமா ரசிகர்களை இன்றும் கவர்ந்து வரும் நடிகை குஷ்பு, தன் கணவர் சுந்தர்.சியின் காஃபி வித் காதல் படத்தில் முன்னதாக நடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது. மேலும் மலையாளத்தில் காதல் முடிச்சு எனும் படத்திலும் குஷ்பு நடித்துள்ளார்.

இந்திய சினிமாவில் ஒரு நடிகைக்கு கோயில் கட்டி கொண்டாடப்பட்டதென்றால் அது நடிகை குஷ்புவுக்கு தான். கோயில் தொடங்கி இட்லி வரை குஷ்புவை பிரதானமாக வைத்து தமிழ் சினிமா ரசிகர்கள் அவரைக் கொண்டாடித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Embed widget