Actress Khushbu : நீண்ட நாட்களுக்கு பிறகு சீரியலில் களமிறங்கும் குஷ்பு... இந்தமுறை சன் டிவி இல்ல..!
கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிப்பரப்ப இருக்கும் புதிய சீரியல் தொடரில் நடிக்க இருக்கிறார் நடிகை குஷ்பு.
80-90 களில் கோலிவுட்டின் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இயக்குநர் சுந்தர்.சி அவர்களை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட குஷ்புவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அரசியலில் ஈடுபாட்டுடன் இருக்கும் குஷ்பு தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் குஷ்பு 20 கிலோ உடல் எடையை குறைத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தார். அது வைரலாக ஷேர் செய்யப்பட்டது.
நடிகை குஷ்பு நீண்ட நாட்களுக்கு பிறகு சின்னத்திரை சீரியலில் நடிக்க இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு சன் டிவியில் நடித்து வந்த அவர், தொடர்ந்து அரசியலில் களமிறங்கி கடந்த சட்டப்பேரவை தேர்தலில் விளக்குதூண் தொகுதியில் போட்டியிட்டார். மேலும், தனது கணவர் சுந்தர்.சி இயக்கி வரும் படங்களில் அவ்வபோது கவுரவ தோற்றங்களில் தலைக்காட்டி வந்தார்.
இந்தநிலையில், தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிப்பரப்ப இருக்கும் புதிய சீரியல் தொடரில் நடிக்க இருக்கிறார் நடிகை குஷ்பு. அந்த சீரியலுக்கு மீரா என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளது. அதற்கான பூஜை செய்யப்பட்ட புகைப்படங்களை நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
I start my new venture #MEERA today. It's a serial to be aired on @ColorsTvTamil soon. I also write the story for it.
— KhushbuSundar or NakhatKhan (@khushsundar) February 14, 2022
Need all your support and encouragement. @sureshmenonnew pic.twitter.com/Q9PIYD46Xt
தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் குஷ்பு. இறுதியாக அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்தின் முறை பெண்ணாக நடித்திருந்தார். இந்த நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கும் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார் குஷ்பு.
Met this gem of a creator @seenuramasamy avl. Heard a brilliant script. Keeping my fingers crossed.. 🙏🙏🙏 pic.twitter.com/0imZtwH2R1
— KhushbuSundar or NakhatKhan (@khushsundar) December 21, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்