மேலும் அறிய

‛அப்போதே இப்படி இருந்திருக்கலாம்...’ அண்ணாத்த ட்ரெய்லரை சுட்டிக்காட்டி குஷ்பு வருத்தம்!

தீபாவளிக்கு அண்ணாத்தே திரைப்படம் வெளியாவதை ஒட்டி இப்போதே ட்ரெய்லர், பாடல்கள் என்று தீப்பொறிகள் தெறிக்க ப்ரோமோஷன் வேலைகள் நடந்துகொண்டிருக்க குஷ்பு ட்விட்டரில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் டீஸர் டிரைலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகியுள்ளதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, வேல ராமமூர்த்தி, ஜெகபதிபாபு, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அண்ணாத்த. இந்நிலையில் நேற்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தீபாவளியையொட்டி படம் இன்னும் 7 நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் படத்தை பார்க்க மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். தற்போது வெளியாகியுள்ள படத்தின் ட்ரெயிலர் இதை மேலும் அதிகரித்துள்ளது. ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தங்கைக்கு ஏதாவது ஒன்றென்றால் முன்னே நிற்கும் அண்ணனாக சூரக்கோட்டை ஊராட்சி தலைவர் காளையனாக அதிரடி காட்டி உள்ளார் ரஜினி.

‛அப்போதே இப்படி இருந்திருக்கலாம்...’ அண்ணாத்த ட்ரெய்லரை சுட்டிக்காட்டி குஷ்பு வருத்தம்!

சூரக்கோட்டை முதல் கல்கத்தா வரை கதை பயணிக்கும்படி அமைந்துள்ளது. கிராமத்து கதைக்களம், அண்ணன் - தங்கை பாசம் என பக்கா கமர்ஷியல் படமாக இந்த படம் உருவாகி உள்ளதை டிரைலரை பார்க்கும் போதே புரிந்து கொள்ள முடிகிறது. டிரைலர் வெளியான உடனே ரசிகர்கள் அதிகம் கொண்டாடினர். டுவிட்டரில் டாப் லெவலில் டிரெண்ட் ஆனது. அதேசமயம் விஸ்வாசம் படத்தின் பல காட்சிகள் இந்த படத்தில் பிரதிபலிப்பதாக விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது. எது எப்படியாக இருந்தாலும் இந்த தீபாவளிக்கு நிச்சயம் ரசிகர்களும் சரவெடி, அதிரடி தான். அண்ணாத்த படத்தை தமிழகத்தில் 600 தியேட்டர்களிலும், அமெரிக்காவில் மட்டும் தமிழ், தெலுங்கு மொழிகளில் 700 தியேட்டரில் வெளியிடுகின்றனர். படத்தில் 4 நாயகிகள் நடித்துள்ள நிலையில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அவர்கள் இருவரும் தோன்றும் காட்சிகள் மிகவும் கலர்புல்லாக உள்ளது. மேலும் நயன்தாராவுடனான காட்சிகளும் சிறப்பா அமைந்துள்ளது. குஷ்பூ, மீனா தோன்றும் காட்சிகளும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

 

இந்நிலையில் குஷ்பு ட்விட்டரில் இரு புகைப்படங்களை ஒப்பிட்டு ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். இரண்டு புகைப்படத்திலுமே குஷ்பு தான் இருக்கிறார். முதலாவது ட்ரெய்லரில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்க்ரீன்ஷாட், இரண்டாவது தற்போது எடுக்கப்பட்ட செல்பி புகைப்படம். சமீபத்தில் குஷ்பு உடல் எடையை குறைத்துள்ளதால் சமீபத்திய புகைப்படத்தில் வயது குறைவாக தெரிகிறார். அதனை ஒப்பிட்டு குஷ்பு எழுதியிருப்பதாவது, "அப்போதும் (அண்ணாத்தே) இப்போதும்… இப்போது இருப்பது போல அப்போதும் ஒல்லியாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது, இருந்தாலும் பரவாயில்லை, அட்ஜஸ்ட் பண்ணுங்க" என்று எழுதியுள்ளார். அதாவது படப்பிடிப்பு நடந்தபோது இப்போதிருப்பதுபோல ஒல்லியான தேகம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறாராம். அதற்கு ரசிகர்கள் அப்போதே இப்படி இருந்திருந்தால் "நயன்தாரா ரோலில் நீங்கள் தான் நடித்திருப்பீர்கள்" என்று கமென்ட் செய்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய பிக்பாஸ் முத்துக்குரன்..பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய பிக்பாஸ் முத்துக்குரன்..பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Embed widget