Khushboo Sundar Arvind Swamy: இவருடன் எப்படி காதலில் விழாமல் இருப்பது... ட்ரீம் பாயை புகழ்ந்த குஷ்பு
அலைபாயுதே படத்தில் அரவிந்த் சாமியுடன் இணைந்து கௌரவ கதாபாத்திரத்தில் நடித்து தன் பெரும் கனவை நிறைவேற்றிக் கொண்டார் குஷ்பு.
![Khushboo Sundar Arvind Swamy: இவருடன் எப்படி காதலில் விழாமல் இருப்பது... ட்ரீம் பாயை புகழ்ந்த குஷ்பு actress Khushboo Sundar shares pictures with her favourite actor Arvind Swamy mentioning him as dream boy in instagram Khushboo Sundar Arvind Swamy: இவருடன் எப்படி காதலில் விழாமல் இருப்பது... ட்ரீம் பாயை புகழ்ந்த குஷ்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/29/4bb9582690afcca5994aed658af576151675001758260574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பொதுவான சினிமா நடிகைகளுக்கான இலக்கணத்துக்குள் அடங்காத உடல்வாகுடன், 80களின் இறுதியில் தொடங்கி தமிழ் சினிமாவில் கோலோச்சி அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தவர் நடிகை குஷ்பு.
தமிழ், தெலுங்கு, இந்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்து கோலோச்சி வந்த குஷ்புவை, அவரது கரியரின் உச்ச காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
இந்திய சினிமாவில் ஒரு நடிகைக்கு கோயில் கட்டி கொண்டாடப்பட்டதென்றால் அது நடிகை குஷ்புவுக்கு தான். கோயில் தொடங்கி இட்லி வரை குஷ்புவின் பெயரால் தொடங்கி தமிழ் சினிமா ரசிகர்கள் அவரைக் கொண்டாடித் தீர்த்தனர்.
அரவிந்த் சாமியின் தீவிர ரசிகை
இப்படி தனக்கு கோயில் எடுத்த ரசிகர்கள் மத்தியில், நடிகர் அரவிந்த் சாமிக்கு கோயில் எடுக்கும் அளவுக்கு தீவிர ரசிகையாக தன்னை எப்போதுமே வெளிப்படுத்தி வந்துள்ளார் நடிகை குஷ்பு.
மணிரத்னம் படத்தில் நடிகர் அரவிந்த் சாமி அறிமுகமானது முதல் தான் அவரது அதி தீவிர ஃபேன் என தொடர்ந்து கூறி வந்துள்ள குஷ்பு, அலைபாயுதே படத்தில் அவருடன் இணைந்து கௌரவ கதாபாத்திரத்தில் நடித்து தன் பெரும் கனவை நிறைவேற்றினார்.
இந்நிலையில், முன்னதாக தன் இன்ஸ்டா பக்கத்தில் நடிகர் அரவிந்த் சாமியுடன் எடுத்துக் கொண்ட புதிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள குஷ்பு, இவருடன் எப்படி ஒருவர் காதலில் விழாமல் இருக்க முடியும் எனக் குறிப்பிட்டு அரவிந்த் சாமியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
View this post on Instagram
இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சியை 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு தமிழ்நாட்டு மருமகளாக செட்டிலான குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
தமிழ் சினிமா ரசிகர்களை இன்றும் கவர்ந்து வரும் நடிகை குஷ்பு, தன் கணவர் சுந்தர்.சியின் காஃபி வித் காதல், விஜய்யின் வாரிசு படங்களில் முன்னதாக நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் காதல் முடிச்சு எனும் படத்திலும் குஷ்பு நடித்துள்ளார்.
தற்போது பாஜகவில் இணைந்து செயல்பட்டு வரும் குஷ்பு அரசியல், சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக உள்ள குஷ்பு தொடர்ந்து தன் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)