(Source: ECI/ABP News/ABP Majha)
Courtney Tillia: கனவில் வந்த கடவுள்.. ஒத்துழைப்பு கொடுத்த கணவர்.. ஆபாச பட நடிகையாக மாறிய ஆசிரியை..!
கடவுள் கூறியதால் தான் ஆபாச நடிகையாக மாறிவிட்டதாக ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ள சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடவுள் கூறியதால் தான் ஆபாச நடிகையாக மாறிவிட்டதாக ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ள சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியை டூ ஆபாச பட நடிகை
சினிமாவை பொறுத்தவரை கவர்ச்சி என்பது தவிர்க்க முடியாத விஷயம் என்றாகி விட்டது. அதுவே எல்லை மீறிப் போகும் போது ரசிகர்களால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது. அதேசமயம் வயது வந்தவர்களுக்கான ஆபாச படங்களில் நடித்த பலரும், ஒரு கட்டத்தில் தங்கள் தவறை உணர்ந்து அந்த துறையிலிருந்து வெளியேறி பிற துறைகளில் கவனம் செலுத்தி சாதித்து வருகின்றனர்.
ஆனால் அமெரிக்காவில் ஆசிரியர் ஒருவர் தான் ஆபாச நடிகையாக மாற இதுதான் என கூறிய ஒரு காரணம் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. அங்குள்ள லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்தவர் கர்ட்னி டில்லியா. 35 வயதான இவர் பிரபல ஆபாச நடிகையாக மக்களால் அறியப்படுகிறார். ஆனால் இவர் உண்மையில் ஒரு முன்னாள் ஆசிரியை என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.
மாணவர்களுக்கு அறிவியல் பாடம் சொல்லிக் கொடுத்த அவர் இன்று ஆபாச நடிகையாக உள்ளார். சமூகத்தில் பெற்றோர்களுக்கு அடுத்ததாக ஆசிரியர்களை வைத்து பார்க்கிறார்கள். அப்படியான மதிப்புமிக்க ஆசிரியர் தொழிலை விட்டு விட்டு எப்படி ஆபாச நட்சத்திரமாக மாறினார் என்பது பலருக்கும் எழும் கேள்வி.
கர்ட்னி டில்லியா தற்போது மூன்று ஆபாச இணையதளங்களை நடத்தி வருகிறார். அவருக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர். இப்படியான பெரிய ரசிகர் பட்டாளத்தைப் கொண்டுள்ள அவர் ஒரு மாதத்தில் 40 லட்சம் முதல் ரூ. 80 லட்சம் வரை சம்பாதிக்கிறார் என கூறப்படுகிறது. இத்தனைக்கும் கர்ட்னி டில்லியா நான்கு குழந்தையின் தாய் ஆவார். அவரின் இந்த தொழிலுக்கு கணவரின் முழு ஒத்துழைப்பும் இருக்கிறது.
கனவில் வந்த கடவுள்
இந்நிலையில் தான் ஆபாச பட நடிகையாக மாறியது குறித்து நான்கு குழந்தையின் தாயான கர்ட்னி டில்லியா தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “இந்த தொழிலில் அதிகப் புகழும் பணமும் கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஒரு ஆபாச நடிகையாக வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். நான் ஆசிரியையாக இருந்த சமயத்தில் கடவுள் கனவில் வந்து என்னை ஆபாச நட்சத்திரமாக மாறச் சொன்னார். நானும் மறுப்பேதும் சொல்லாமல் அவரின் விருப்பப்படி இந்தத் தொழிலில் மகிழ்ச்சியாக ஈடுபட்டு வருகிறேன்.
ஒவ்வொரு நபரும் ஒரு நோக்கத்துடன் பிறக்கிறார்கள், அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேசமயம் கடவுளின் செய்திகளைப் பெறவும், கடவுள் யார் என்பதைப் புரிந்துகொள்ளவும், எனக்கு எந்த குறிப்பிட்ட மத அமைப்பும் தேவையில்லை. எனது இந்த புதிய பணி என்னை கடவுளிடம் நெருக்கமாக்கியுள்ளது. மேலும் வயது வந்தோருக்கான டேட்டிங் தளத்தைத் தொடங்கிய பிறகு ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலினத்தவர்களும் என்னை மிகவும் ரசித்தனர். இது எனக்கு ஒரு பிளஸ் பாயிண்டாக மாறியது என கர்ட்னி டில்லியா தெரிவித்துள்ளார்.