மேலும் அறிய

Andrea Jeremiah: மலையாள சினிமா பெஸ்ட்... அங்கேயே வாழலாம்.. ஆண்ட்ரியா ஓபன் டாக்!

மலையாள திரையுலகில் எழுதப்பட்ட கதாபாத்திரங்களின் தரம் அசாதாரணமானதாகும். எனக்கு மட்டும் அந்த மொழி சரளமாகத் தெரிந்திருந்தால், நிச்சயம்  நான் அங்கு சென்று நடித்து கேரளாவிலேயே  குடியேறியிருப்பேன் என கூறினார்.

மலையாள சினிமாவில் கொடுக்கப்படும் கேரக்டர்கள் தரமானதாக இருப்பதாக நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா தெரிவித்துள்ளார். 

லிஃப்ட், டாடா, ஸ்டார் உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கவின் அடுத்ததாக நடித்துள்ள படம் மாஸ்க். அறிமுக இயக்குநர் விகர்னன் அசோக் இயக்கியுள்ள இப்படத்தில் ஹீரோயினாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கு நடிகை ருஹானி சர்மாவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் சார்லி, பால சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். 

இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனமும்,பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் நவம்பர் 21ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இந்த நிலையில் இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகை ஆண்ட்ரியா பேசியது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. 

அதாவது ஒரு நிகழ்வில் பேசிய ஆண்ட்ரியா ஜெரேமியா, "மலையாள திரையுலகில் எழுதப்பட்ட கதாபாத்திரங்களின் தரம் அசாதாரணமானதாகும். எனக்கு மட்டும் அந்த மொழி சரளமாகத் தெரிந்திருந்தால், நிச்சயம்  நான் அங்கு சென்று நடித்து கேரளாவிலேயே  குடியேறியிருப்பேன்" என தெரிவித்தார். மேலும் மலையாள சினிமாவில் கலைஞர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை, கதைகளில் காணப்படும் மனிதநேயம் மற்றும் நடிப்புத் திறனை மதிக்கும் கலாச்சாரம் ஆகியவையே தனக்குள் இந்த எண்ணத்தை உருவாக்கியது என்றும் அவர் விளக்கியுள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், மாஸ்க் படம் எதிர்பார்த்ததைப் போல பெரிய வெற்றி பெற்றால், நீண்ட நாட்களாக ரிலீசுக்கு தாமதமாகும்  பிசாசு 2 படத்தை வெளியிட தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று   அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் நடிகையாகவும் தான் முன்னேறி வருவதாகவும், பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதாகவும் ஆண்ட்ரியா கூறியுள்ளார். அதேசமயம் சினிமாவில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்' என்று சொல்வது தவறானதாகும்.  அந்த வார்த்தை மாற்றப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

உடனடியாக மலையாளம் மற்றும் ஹாலிவுட் திரையுலகை குறிப்பிட்டு பேசிய ஆண்ட்ரியா, அங்கெல்லாம் ஒரு படத்தில் முன்னணி கேரக்டரில் நடித்திருந்தாலும் அடுத்த படங்களில் எதைப் பற்றியும் யோசிக்காமல் துணை வேடங்களில் நடிப்பார்கள். கதையில் தனக்கு பிடித்த வேடம் என்றால் அது முன்னணி கேரக்டரா, துணை வேடமா என்றெல்லாம் பார்ப்பதில்லை. இதனால் ரூ.4 கோடியில் எடுக்கப்படும் ஒரு படம் ரூ.100 கோடி கூட வசூல் செய்யலாம். இவை அனைத்தும் மலையாளத்தில் மட்டுமே சாத்தியம் எனவும் ஆண்ட்ரியா ஜெரேமியா கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget