மேலும் அறிய

Ameesha Patel: திருமணம் செய்யாமல் இருப்பதே சிறந்தது.. விஜய் பட நடிகை ஓபன் டாக்!

வசதியான பல குடும்பங்களிலிருந்து எனக்கு இப்போதும் பலவிதமான வரன்கள் வருகின்றன. என் வயதில் பாதியானவர்கள் என்னைக் காதலுக்கு அழைக்க விரும்புகிறார்கள் நானும் அதற்குத் தயாராக இருக்கிறேன் என அமீஷா படேல் கூறியுள்ளார்.

என் வாழ்க்கையில் திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணமே இல்லை என நடிகை அமீஷா படேல் தெரிவித்துள்ளார். 

தனியாக இருப்பதில் மகிழ்ச்சி

அவர் தனது வலைத்தளப் பக்கத்தில் #AskAmy என பதிவிட்டு ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் அவரிடம் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டார். அதற்கு, அமீஷா வெளிப்படையாகவே பதிலளித்தார். ஒருபோதும் இல்லை. தனியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னை நேசிக்கும் நூறு நெருங்கிய குடும்பத்தினரும் நண்பர்களும் எனக்கு இருக்கிறார்கள். ஒரே ஒரு ஆண் வந்து அதையெல்லாம் மாற்றுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது” என குறிப்பிட்டார். 

அதேசமயம் முன்பு ஒரு பேட்டியில் தனக்குத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை என்று அமீஷா தற்போது கூறினாலும், காதலுக்கும் தனது தொழிலுக்கும் இடையே தான் எடுத்த கடினமான முடிவுகள் குறித்து அமீஷா படேல் வெளிப்படையாகப் பேசியிருந்தார்.

பாடம் கற்றுக்கொள்ள வைத்த காதல்

தான் திரைப்படத் துறையில் நுழைவது எனது காதலருக்கு சங்கடமாக இருந்ததால் ஒரு தீவிரமான உறவிலிருந்து விலகியதாக தெரிவித்திருந்தார். மேலும் உங்களை நேசிப்பவர்கள் உங்கள் வாழ்க்கை வளர வேண்டும் என நினைப்பார்கள். அதற்கு அனுமதி கொடுப்பார்கள். நான் என் தொழிலுக்காக நிறைய இழந்திருக்கிறேன், காதலுக்காகவும் நிறைய இழந்திருக்கிறேன். நான் ஒன்றை மற்றொன்றிற்காக விட்டுக்கொடுத்திருக்கிறேன்.  இரண்டிலிருந்தும் நான் பாடம் கற்றுக்கொண்டேன் என்று நினைக்கிறேன். நான் காதலித்த அந்த நபர் தெற்கு மும்பையைச் சேர்ந்த ஒரு பெரிய பிசினஸ்மேனின் மகனாவார். எங்கள் இருவரின் பின்னணியும் ஒரே மாதிரியாக தான் இருந்தது. 

ஆனால் நான் சினிமாவுக்கு செல்கிறேன் என சொன்னபோது என் காதலர் விரும்பவில்லை. அப்போது எனக்கு காதலை விட கேரியர் முக்கியமாக இருந்தது. தகுதியான ஒருவர் எனக்குக் கிடைக்கும் வரை திருமணத்திற்கு நான் முழு மனதுடன் தயாராக இருக்கிறேன். எல்லாச் சூழல்களையும் கடந்து என்னைக் கண்டுபிடித்து சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்பவரே எனக்கு ஏற்றவர். 

வசதியான பல குடும்பங்களிலிருந்து எனக்கு இப்போதும் பலவிதமான வரன்கள் வருகின்றன. என் வயதில் பாதியானவர்கள் என்னைக் காதலுக்கு அழைக்க விரும்புகிறார்கள் நானும் அதற்குத் தயாராக இருக்கிறேன். ஆனால் புரிதல் கொண்டவராக இருக்க வேண்டும். என்னை விட வயதில் மூத்த பலரை நான் சந்தித்திருக்கிறேன். அவர்களுக்கு ஈக்கு இருக்கும் அறிவு கூட இல்லை என தெரிவித்திருந்தார். 51 வயதான அமீஷா படலை திருமணம் செய்ய சொல்லி ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

அமீஷா படேல் தமிழில் தற்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சரான விஜயுடன் 2003ம் ஆண்டு வெளியான புதிய கீதை படத்தில் ஜோ என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இப்படத்தில் இவர் ஆடிய வசியக்காரி பாடல் இன்றளவும் ரசிகர்களிடையே பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Embed widget