Watch Video: கஷ்டம் வரலாம்.. இந்த நிமிஷம் மட்டும்தான் நிஜம்.. அமலா பால் சொன்ன Life அட்வைஸ்..!
வீடியோவில் கடைசியாக, வெடி ஒன்றுக்கு அமலாபால் பயந்து அலறியது பார்ப்பதற்கு அழகாக இருந்தது.
![Watch Video: கஷ்டம் வரலாம்.. இந்த நிமிஷம் மட்டும்தான் நிஜம்.. அமலா பால் சொன்ன Life அட்வைஸ்..! Actress Amala Paul latest instagram video with her reaction gone viral- Watch Video Watch Video: கஷ்டம் வரலாம்.. இந்த நிமிஷம் மட்டும்தான் நிஜம்.. அமலா பால் சொன்ன Life அட்வைஸ்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/29/0a84335ef2791e7c575d06a53879014f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வெள்ளை நிற உடையில் உட்கார்ந்து இசை ஒன்றுக்கு நடன அசைவுகள் கொடுக்கும் நடிகை அமலாபாலின் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாட்டில் கொலை, கொள்ளை, தற்கொலைகள், பாலியல் வன்கொடுமை போன்ற செய்திகள் தினமும் வருவது அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. டிவியை பார்த்தாலும், தினசரி பேப்பரை திறந்தாலும் இந்த செய்திகளே அதிகம் உள்ளன. பொதுமக்களும், எதிர்மறையான செய்திகளை தினமும் படித்து வருவதால் அவர்களுக்குள்ளும் ஒருவித பயமும், அதிர்ச்சியும் ஏற்படுகிறது. இந்த செய்திகளுக்கு இடையே, தற்போது தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால், மூன்றாவது கண் என்று கூறப்படும் கேமராவால், பல்வேறு சுவாரஸ்யமான, அதிர்ச்சிகரமான சம்பவத்தின் காட்சிகளும் கிராம் முதல் நகரம் வரை உள்ள மக்களுக்கு உடனே தெரிந்து விடுகிறது. இதில், சுவாரஸ்யமான வீடியோக்கள் பல சமூகவலைதளங்களில் வைரலாகி, உலகத்தின் எந்த மூலைகளில் இருக்கும் மனிதர்களுக்கும் சென்று சேர்ந்து விடுகிறது.
குறிப்பாக பிரபலங்கள் வெளியிடும் வீடியோக்கள் பெருமளவில் வரவேற்பை பெற்று கூடுதல் கவனம் பெறுகின்றன. அவர்கள் செய்யும் குறும்பு தனமான வீடியோக்கள் ரசிகர்களை கவரும் வகையில் இருப்பதால் அது வேகமாக பரவி வைரலாகிறது. அந்த வகையில், நடிகை அமலாபால் இசை ஒன்று உட்கார்ந்து கொண்டே நடன அசைவுகள் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அமலாபால், வருத்தங்கள் வரலாம், வருத்தங்கள் போகலாம் இந்த நிமிடம் மட்டுமே நிஜம் என்று தத்துவங்களையும் எழுதியுள்ளார். வீடியோவில் கடைசியாக, வெடி ஒன்றுக்கு அமலாபால் பயந்து அலறியது பார்ப்பதற்கு அழகாக இருந்தது.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)