1500 ரூபாய்க்கு மாடலிங் தொழில்..இன்று பணக்கார நடிகைகளில் இரண்டாம் இடம்..ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு
Aishwarya Rai Net Worth : நடிகை ஐஸ்வர்யா ராய் மாடலாக இருந்ததில் தொடங்கி இன்று அவரது முழு சொத்து மதிப்பு குறித்த தகவல்களை பார்க்கலாம்

ஐஸ்வர்யா ராய்
பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராய் விளம்பரங்களுக்கு மாடலாக தனது கரியரைத் தொடங்கினார். 1994 ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் நாயகியாக அறிமுகமானப் பின் அவருக்கு நாலா பக்கமிருந்தும் பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. தமிழ் , இந்தி , பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இறுதியாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 ஆவது பாகத்தில் நடித்தார்.
மாடலாக ஐஸ்வர்யா ராய் வாங்கிய சம்பளம்
ஐஸ்வர்யா ராய் மாடலாக இருந்தபோது வாங்கிய சம்பளத்தின் பில் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 1992 ஆம் ஆண்டு கிருபா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மாடலாக ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் ஐஸ்வர்யா ராயின் சம்பளம் ரூ 1500 என குறிப்பிடப் பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராய் சொத்து மதிப்பு
திரைப்படங்கள் தவிர்த்து சர்வதேச அழகு சாதன பிராண்ட் ஆன லாரியல் பாரிஸ் நிறுவனத்தின் விளம்பர தூதராக ஐஸ்வர்யா ராய் இருந்து வருகிறார். ஒரு படத்தில் நடிப்பதற்கு 10 முதல் 12 கோடி வரை ஐஸ்வர்யா ராய் சம்பளமாக பெறுகிறார். அதே நேரத்தில் விளம்பரத்தில் ஒரு நாள் நடிப்பதற்கு 6 முதல் 7 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார். இந்தியாவில் பணக்கார நடிகைகளில் ஜூகி சாவ்லாவை அடுத்து இரண்டாம் இடத்தில் ஐஸ்வர்யா ராய் இருந்து வருகிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ 900 கோடி என கூறப்படுகிறது.
கான் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா
சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடந்து முடிந்த கான் திரைப்பட விழாவில் லாரியல் பாரிஸ் சார்பாக ஐஸ்வர்யா ராய் கலந்துகொண்டார். வெள்ளை நிற சேலையில் ஐஸ்வர்யா ராய் பலரது கவனத்தை ஈர்த்தார்.
View this post on Instagram





















