Watch Video | விதவிதமான போஸ்.! இன்ஸ்டாவில் க்யூட் வீடியோவை ஷேர் செய்த ஷங்கர் மகள் அதிதி!
இயக்குநர் ஷங்கர் மகள் இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்
![Watch Video | விதவிதமான போஸ்.! இன்ஸ்டாவில் க்யூட் வீடியோவை ஷேர் செய்த ஷங்கர் மகள் அதிதி! Actress Aditi shankar insta video goes viral Watch Video | விதவிதமான போஸ்.! இன்ஸ்டாவில் க்யூட் வீடியோவை ஷேர் செய்த ஷங்கர் மகள் அதிதி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/06/9214605c12b8e124bc85c75d53b6e601_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படுபவர் ஷங்கர். ஷங்கர் கடந்த 1993 ஆம் ஆண்டு ஜெண்டில்மேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தனது 28 ஆண்டுகால சினிமா பயணத்தில் கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக ஷங்கர் வலம் வருகிறார். தான் சினிமாவில் பெரியளவில் சாதித்திருந்தாலும் ஷங்கரின் குடும்பத்தினர் யாரும் சினிமா பக்கம் வராமலேயே இருந்தனர்.
View this post on Instagram
இந்நிலையில்தான் ஷங்கரின் மகள் அதிதி,முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் படத்தில் நடித்து வருகிறார். திரையுலகில் கால்பதித்த பிறகு சோஷியல் மீடியாவிலும் ஆக்டீவாக இருக்கிறார் அதிதி. தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். தற்போது போட்டோ ஷூட் ஒன்றுக்காக வித விதமான போஸ்களை கொடுத்து அவர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
இதற்கிடையே,
ஷங்கரின் மகனான் அர்ஜித் ஷங்கர் விரைவில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார் என்றும், இயக்குநர் பாலாஜி சக்திவேல் அவரை இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காதல், வழக்கு எண் 18/9 உள்ளிட படங்கள் மூலம் கவனிக்க வைத்தவர் பாலாஜி சக்திவேல். சினிமாவில் தன்னுடைய கால்தடத்தை அழுத்தமாக பதிக்க வேண்டுமென்பதால் மிகச்சரியான ஸ்கிரிப்டை தேர்ந்தெடுத்து அதற்கான நடிப்பு பயிற்சியிலும் அர்ஜித் ஷங்கர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)