‛கோலிவுட்டிலும் வாரிசு ஆதிக்கம்...’ ஷங்கரின் மகள் தான் டார்கெட்டா? -கடுப்பான நடிகை ஆத்மிகா!
விருமன் படத்தில் ஹீரோயினாவதன் மூலம் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என்றழைக்கப்படும் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து நடிகை ஆத்மிகா மறைமுகமாக சாடியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்கும் இயக்குநர்களில் ஒருவரான முத்தையா தற்போது நடிகர் கார்த்தியை வைத்து விருமன் என்ற படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என்றழைக்கப்படும் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
#Maaveeran / #Mahaveerudu shoot began yesterday. Thank you @shankarshanmugh for gracing us with your presence! 🙏🏼😇@Siva_Kartikeyan @AditiShankarofl @madonneashwin @iamarunviswa @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 @Kumar_gangappan @LokeshJey @DoneChannel1 pic.twitter.com/6zCRzrOfDR
— Shanthi Talkies (@ShanthiTalkies) August 4, 2022
அதுமட்டுமல்லாமல் படத்தில் அதிதி பாடல் ஒன்றையும் பாடியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் மதுரையில் விருமன் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில் நேற்றைய தினம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் அப்டேட் வெளியானது.
அதில் ஹீரோயினாக அதிதி ஷங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இப்படி இருக்கையில் தமிழ் சினிமாவில் வாரிசு அரசியல் தலை தூக்கியுள்ளதாக மறைமுகமாக நடிகை ஆத்மிகா குற்றம் சாட்டியுள்ளார். இந்திய சினிமாவை பொறுத்தவரை அனைத்து மொழிகளிலும் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் தொடர்ந்து இருக்கவே செய்கிறது. இது இந்தி மொழியில் கடந்த 2020 ஆம் ஆண்டு மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தின் போது கடுமையாக எதிரொலித்தது.
It’s good to see privileged getting easy way through the ladder while the rest 🥲
— Aathmika (@im_aathmika) August 4, 2022
Paathukalam 🙌🏽
மீசையை முறுக்கு, கோடியில் ஒருவன் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ஆத்மிகா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ஷ்டசாலிகள் எளிதாக ஏணி மீது ஏறி விடுகிறார்கள். மற்றவர்கள்...பாத்துக்கலாம்..என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு நடிகை அதிதி ஷங்கரை குறிப்பிட்டு தான் என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்