மேலும் அறிய

ஜோதிகாவுடன் காதல்.. சூர்யாவை தூண்டி விட்ட ராதிகா.. அயோக்கிய பெண் என திட்டிய சிவகுமார்!

சூர்யா - ஜோதிகா காதலிக்க ஆரம்ப காரணம் நடிகை ராதிகா என நடிகர் சிவகுமார் கூறிய நிலையில், அந்த நேரத்தில் என்ன நடந்தது என்பது பற்றி காணலாம்.

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளான சூர்யா - ஜோதிகா காதலிக்க ஆரம்ப காரணம் நடிகை ராதிகா என நடிகர் சிவகுமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்கிறார். இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இப்படியான நிலையில் ஒரு நேர்காணலில் சிவகுமார் மற்றும் ராதிகா இணைந்து பங்கேற்றனர். அந்த நேர்காணலை நடிகை சுஹாசினி தொகுத்து வழங்கியிருந்தார்.

அதில், நீங்கள் சிவகுமார் மற்றும் சூர்யாவுடன் இணைந்து உயிரிலே கலந்தது என்ற படத்தில் நடித்தது பற்றி ராதிகாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராதிகா, “அந்த காலக்கட்டத்தில் சூர்யா ரொம்ப அமைதியானவர். குனிந்த தலை நிமிராமல் தான் உட்கார்ந்திருப்பார். சூர்யா இப்படியெல்லாம் இருக்கக்கூடாது. தைரியமாக, சிரித்த முகமாக இருக்க வேண்டும் என சொல்வேன். 

அந்த படத்தில் ஹீரோயினாக ஜோதிகா நடித்திருந்தார். அவரும் ஷூட்டிங் நடக்கும்போது ஒரு மூலையில் அமைதியாக உட்கார்ந்திருப்பார். நான் சூர்யாவை அழைத்து போய் ஜோதிகாவிடம் பேசு. நல்லா பேசு என சொல்வேன் என கூறினார். இப்படி அமைதியா வெட்கப்பட்டு கொண்டு இருந்தால் எப்படி லவ் சீனில் எல்லாம் நடிக்க முடியும். அதனால் ஜோதிகாவிடம் பேச சொல்வேன். அவர் வேண்டாம் அக்கா என சொல்வார்” என தெரிவித்தார். 

இதனையடுத்து பேசிய நடிகர் சிவகுமார், “ சூர்யா,ஜோதிகா இரண்டு பேரை சேர்த்து வைத்த அயோக்கிய பெண் ராதிகா தான். அவன் பாட்டுக்கு சிவனேன்னு இருந்திருப்பான். போய் பேசு பேசு என சொல்லி இன்று அவர்கள் இரண்டு குழந்தைக்கு பெற்றோராக இருக்கிறார்கள்” என நகைச்சுவையாக தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய ராதிகா, நான் சித்தி சீரியல் நடிக்கும்போது சூர்யா ஜோதிகா காதல் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. அந்த சீரியல் ஷூட்டிங்கில் காலை முதல் மாலை வரை சிவகுமார் என்னை வச்சு செய்து விடும் அவர்கள் காதலிப்பதைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார். இந்த பக்கம் சூர்யா எனக்கு போன் செய்து அப்பா என்ன மனநிலையில் இருக்கிறார் என விசாரிப்பார் என்று கூறினார். 

அதைத் தொடர்ந்து பேசிய சிவகுமார், “சூர்யா - ஜோதிகா இருவரும் 5 ஆண்டுகள் காதலித்தார்கள். சினிமாவில் 150 பேரை காதலிப்பது போல நடித்த நான் ஏன் என்னுடைய பையன் ஒரு பெண்ணை காதலிக்கிறான் என சொல்லும்போது வேண்டாம் என சொல்ல முடியும். கட்டுன்னா ஜோதிகாவை.. இல்லையென்றால் நான் வாழ்க்கை முழுவதும் தனியாக இருந்து கொள்கிறேன் என சொன்னான். இப்படி ஒரு உண்மையான காதலா என சல்யூட் அடித்து திருமணத்திற்கு ஓகே சொன்னேன்” என தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget