Double XL : பாலிவுட்டில் அறிமுகமாகிய நடிகர் மகத்...Double XL படத்தின் சிறப்பு காட்சியை கண்டுகளித்த திரைபிரபலங்கள்!
நடிகர்கள் சிலம்பரசன், வைபவ், ஜெய், இயக்குனர் எஸ் ஜே சூர்யா, நடன இயக்குனர் சாண்டி ஆகியோர் இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சியை நேற்று கண்டுகளித்துள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் மஹத் ராகவேந்திரா. ஏற்கனவே நடிகர் மஹத் மாநாடு, மங்காத்தா, ஜில்லா போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது Double XL திரைப்படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி ஆகியுள்ளார்.
டி-சீரிஸ், வக்காவ் பிலிம்ஸ் மற்றும் ரெக்லைனிங் சீட்ஸ் சினிமா நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து தயாரித்துள்ள காமெடி கலந்த டிராமா திரைப்படமான Double XL படத்தை இயக்கியுள்ளார் சத்திரம் ரமணி. இந்த படம் நவம்பர் 4 ஆம் தேதி வெளியானது.உடல் பருமனான இரண்டு பெண்களும் அவர்களின் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் Double XL.
View this post on Instagram
ஹூமா குரேஷி மற்றும் சோனாக்ஷி சின்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் அறிமுகமாகிறார் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான். இப்படத்தின் தாழி தாழி... பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். இது சிலம்பரசன் பாடும் முதல் ஹிந்தி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
It's time to set the dance floor on fire as #TaaliTaali with the voice of my Thalaivan @SilambarasanTR_ 🤩
— Mahat Raghavendra (@MahatOfficial) October 14, 2022
Hope you guys love the song!
Need all you blessings love & support ❤️
Song Out Now - https://t.co/nJghQY566N #DoubleXL releasing in the cinemas near you on 4th Nov 2022. pic.twitter.com/kI93lwRg6G
Double XL திரைப்படத்தின் சிறப்பு காட்சி நேற்று திரையிடப்பட்டுள்ளது. நடிகர்கள் சிலம்பரசன், வைபவ், ஜெய், இயக்குனர் எஸ் ஜே சூர்யா, நடன இயக்குனர் சாண்டி ஆகியோர் இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சியை நேற்று கண்டுகளித்துள்ளனர்.
#SilambarasanTR , #SjSuryah and many celebrities attended @MahatOfficial's Bollywood debut film #DoubleXL special show yesterday..⭐ pic.twitter.com/IGoTRe5HdY
— Laxmi Kanth (@iammoviebuff007) November 9, 2022
A Big Thanks to my dear friends for gracing the screening of my first Hindi movie #DoubleXL @dhayaalagiri @SilambarasanTR_ @anushadhaya @Actor_Jai @actor_vaibhav @elann_t @Dhananjayang @iamSandy_Off @nameis_krishna @iam_SJSuryah @shiva_chandrika @sathishoffl @prosathish ❤️ pic.twitter.com/4dJNYQpIfb
— Mahat Raghavendra (@MahatOfficial) November 9, 2022
நடிகர் மகத் சிறப்பு காட்சியை காண வந்த சக நடிகர்களுக்கு, ''எனது முதல் ஹிந்தி படத்தை பார்க்க வந்த அனைவருக்கும் நன்றி'' என ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.