24 Years Of Nee Varuvai Ena: கண்களுக்காக உருகிய காதல்... ‘நீ வருவாய் என’ படம் வெளியாகி இன்றோடு 22 வருஷமாச்சு.. !
Nee Varuvai Ena Tamil Movie: பார்த்திபன், தேவயானி , அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘நீ வருவாய் என’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைகின்றன
ராஜகுமாரன் இயக்கத்தில் அஜித் குமார், பார்த்திபன், தேவயானி, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடித்த ‘நீ வருவாய் என’ (Nee Varuvai Ena) திரைப்படம் வெளியாகி இன்றுடன் 24 வருடங்கள் ஆகின்றன. எஸ்.ஏ ராஜ்குமார் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.
காதலில் காத்திருப்பது!
காதலுக்கு கண்கள் இல்லை என்று ஒரு பழைய வழக்கம் உண்டு. கண்கள் இல்லையென்றால் காதலே இல்லை என்று இயக்குநர் யோசித்துவிட்டது போல் ஒரு கதைதான் ‘நீ வருவாய் என’.
ஒரு ஊருக்கு புதிதாக வருகிறார் கணேஷ் (பார்த்திபன்). அங்கு நந்தினி என்கிற பெண்ணின் மேல் காதல் வயப்படுகிறார். நந்தினி, கணேஷ் தங்களது ஊருக்கு வந்ததில் இருந்து அவருக்கு தேவையானதை எல்லாம் பார்த்து பார்த்து செய்து வருகிறார்.அவரை சந்திக்க ஏதாவது காரணத்தை தேடி வருகிறார். இதை எல்லாம் வைத்துக் கொண்டு நந்தினிக்கும் தன் மேல் காதல் இருப்பதாக நினைத்துக் கொண்டு தனது பெற்றோரிடம் பெண் பார்க்க வரச் சொல்கிறார் கணேஷ்.
ஆனால் நந்தினி கணேஷை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிடுகிறார் நந்தினி. இதற்கான காரணத்தை கணேஷ் கேட்கும்போது தான் நந்தினி பார்க்க நினைத்தது கணேஷை இல்லை, தான் காதலித்த சுப்ரமணியின் (அஜித் குமார்) கண்களை என தெரிகிறது . .
நந்தினி திருமணம் செய்துகொள்ள இருந்த சுப்ரமணி இறந்து போக அவரது கண்கள் எடுத்து அதே விபத்தில் கண்களை இழந்து கணேஷுக்கு பொருத்தப்படுகிறது. தான் காதலித்த நபருடன் வாழ முடியாதவரின் கண்களை கடைசி வரையில் பார்த்து வாழ்வது மட்டுமே நந்தினியின் ஆசை. கடைசி வரை தனது காதலை மனதில் வைத்தபடியே இருக்க தீர்மானிக்கிறார் கணேஷ்.
ஏஸ்.ஏ ராஜ்குமார்
எஸ்.ஏ ராஜ்குமார் இசையமைத்து அனைத்துப் பாடல்களும் இன்றும் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கின்றன. “பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாய் என படத்தின் டைட்டில் பாடலே கதை சொல்லும். பாடல்களுடன் சேர்ந்து படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.
படப்பிடிப்பில் மலர்ந்த காதல்
படத்தில் வேண்டுமானால் கணேஷின் காதலை நந்தினி ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருக்கலாம், ஆனால் படத்தின் இயக்குநரான ராஜகுமாரனின் காதலை ஏற்றுகொண்டார் நந்தினியாக நடித்த தேவயானி.
இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. வீட்டாரது சார்பில் இருந்து கடுமையாக எதிர்ப்பு வந்த நிலையில் இருவரும் தங்களது குடுமபத்தினரின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்துகொண்டார்கள். படத்தின் க்ளைமேக்ஸ் என்னவோ சோகமாக முடிந்தாலும் நிஜத்தில் க்ளைமேக்ஸ் சிறப்பானதாகவே முடிந்தது!