மேலும் அறிய
Advertisement
Thapalathy 68: 18 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் மீண்டும் இணையும் ‘பிக்பாஸ்’ பிரபலம் - ரசிகர்கள் மகிழ்ச்சி
Thapalathy 68: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தில் பாடகர் யுகேந்திரன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Thapalathy 68: விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தில் பாடகர் யுகேந்திரன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. மாஸ்டர் படத்துக்கு பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்ததால் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. லியோ படத்திற்கு பிறகு தளபதி 68 படத்தில் விஜய் நடிக்க இருப்பதாகவும், அதை வெங்கட் பிரபு இயக்குவதாகவும் அறிவிப்பு வெளியானது.
அதன்படி சென்னையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, பாடல் காட்சி மற்றும் சில ஆக்ஷன் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. சென்னையை முடித்து கொண்டு அடுத்தக்கட்டமாக படக்குழுவினர் துருக்கியில் சூட்டிங்கை தொடங்க உள்ளதாகவும் இதற்காக சில நாட்களில் தளபதி 68 படக்குழு துருக்கி செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர்கள் மட்டும் இல்லாமல் தளபதி 68 படத்தில் சினேகா, லைலா, பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக சென்னையில் எடுக்கப்பட்ட பாடல் காட்சிகளில் விஜய்யுடன் இணைந்து பிரபுதேவா மற்றும் பிரஷாந்த் நடனமாடியதாக கூறப்படுகிறது. இவர்கள் மட்டும் இல்லாமல் 90களில் பிரபல ஹீரோவாக இருந்த மோகன் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தளபதி 68 படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகரும், பாடகருமான யுகேந்திரன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு முக்கியமான லீட் கேரக்டர் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக 2015ம் ஆண்டு வெளிவந்த திருப்பாச்சி படத்தில் விஜய், யுகேந்திரன் ஒன்றாக இணைந்து நடித்தனர். இந்த கூட்டணி 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் யுகேந்திரன் ஒரு போட்டியாளராக பங்கேற்றிருந்தார். ஒரு மாதத்திற்கு 50 நாட்களுக்கு மேலாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த யுகேந்திரன் அண்மையில் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய யுகேந்திரனுக்கு தற்போது விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது. இதனால் ரசிகர்கல் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion