KGFChapter2 Beast Collection: உண்மை நிலவரம் இதுதான்.. பீஸ்ட்டை ஓரம்கட்டிய கே.ஜி.எஃப் 2 கலெக்ஷன் ரிப்போர்ட்..
கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் மொத்த வசூல் மற்றும் தமிழகத்தில் அந்தப்படம் வசூல் செய்த தொகை எவ்வளவு என்பது குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளன.
![KGFChapter2 Beast Collection: உண்மை நிலவரம் இதுதான்.. பீஸ்ட்டை ஓரம்கட்டிய கே.ஜி.எஃப் 2 கலெக்ஷன் ரிப்போர்ட்.. Actor Yash KGFChapter2 and Vijay Beast Box Office Collection KGFChapter2 Beast Collection: உண்மை நிலவரம் இதுதான்.. பீஸ்ட்டை ஓரம்கட்டிய கே.ஜி.எஃப் 2 கலெக்ஷன் ரிப்போர்ட்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/12/d9e21b6c6a88ffb0bddf3733d3464a7f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் மொத்த வசூல் மற்றும் தமிழகத்தில் அந்தப்படம் வசூல் செய்த தொகை என்பது குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தத் தகவலின் படி, “ கே.ஜி.எஃப் 2 திரைப்படம் கடந்த 26 நாட்களில் மொத்தமாக 1169.87 கோடி வசூலித்துள்ளது. இதற்கு போட்டியாக வெளியிடப்பட்ட விஜயின் பீஸ்ட் திரைப்படம் கடந்த 27 நாட்களில் மொத்தமாக 153.64 கோடி வசூலித்துள்ளது.
#KGFChapter2 WW Box Office
— Manobala Vijayabalan (@ManobalaV) May 11, 2022
Week 1 - ₹ 720.31 cr
Week 2 - ₹ 223.51 cr
Week 3 - ₹ 140.55 cr
Week 4
Day 1 - ₹ 11.46 cr
Day 2 - ₹ 8.90 cr
Day 3 - ₹ 24.65 cr
Day 4 - ₹ 25.42 cr
Day 5 - ₹ 8.07 cr
Day 6 - ₹ 6.84 cr
Total - ₹ 1169.71 cr
DREAM run continues.
#Beast WW Box Office
— Manobala Vijayabalan (@ManobalaV) May 11, 2022
Week 1 - ₹ 143.72 cr
Week 2 - ₹ 8.77 cr
Week 3 - ₹ 0.93 cr
Week 4 - In Lacs
Day 1 - ₹ 4.5 lacs
Day 2 - ₹ 3.2 lacs
Day 3 - ₹ 2.7 lacs
Day 4 - ₹ 4.6 lacs
Day 5 - ₹ 5.0 lacs
Day 6 - ₹ 1.4 lacs
Day 7 - ₹ 1.0 lacs
Total - ₹ 153.64 cr
DISASTER
தமிழ்நாட்டில் நிலவரம் என்ன?
தமிழ்நாட்டை பொருத்தவரை கடந்த 27 நாட்களில் 127.12 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. பீஸ்ட் திரைப்படம் கடந்த 28 நாட்களில் 65.45 கோடி வசூலித்துள்ளது.
#KGFChapter2 TN Box Office
— Manobala Vijayabalan (@ManobalaV) May 11, 2022
Week 1 - ₹ 59.84 cr
Week 2 - ₹ 32.65 cr
Week 3 - ₹ 21.30 cr
Week 4
Day 1 - ₹ 1.03 cr
Day 2 - ₹ 0.96 cr
Day 3 - ₹ 4.81 cr
Day 4 - ₹ 5.13 cr
Day 5 - ₹ 0.78 cr
Day 6 - ₹ 0.62 cr
Total - ₹ 127.12 cr
DECENT hold.
#Beast TN Box Office
— Manobala Vijayabalan (@ManobalaV) May 11, 2022
Week 1 - ₹ 58.85 cr
Week 2 - ₹ 5.67 cr
Week 3 - ₹ 0.72 cr
Week 4 In Lacs
Day 1 - ₹ 4.0 lacs
Day 2 - ₹ 3.0 lacs
Day 3 - ₹ 2.5 lacs
Day 4 - ₹ 4.5 lacs
Day 5 - ₹ 4.8 lacs
Day 6 - ₹ 1.3 lacs
Day 7 - ₹ 0.9 lacs
Total - ₹ 65.45 cr
TERRIBLE run ends.
வசூல் சாதனை
யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 14 ஆம் தேதி வெளியான கே.ஜி.எஃப் பாகம் 2. இந்தத்திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று, வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. வெளியான அன்றைய நாளே 130 கோடிக்கு மேல் வசூலித்த கே.ஜி.எப் 2 திரைப்படம் அண்மையில் 1000 கோடியை கடந்தது.
View this post on Instagram
முன்னதாக பாகுபலி பாகம் 1 வசூலித்த மொத்த வசூலை படம் வெளியான 7 நாட்களில் கே.ஜி.எப் 2 திரைப்படம் வசூலித்து சாதனை படைத்தது. அதனைத்தொடர்ந்து இந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் வசுலித்த தொகையை விட அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
19 வயது எடிட்டர்
இந்தப்படத்தில் யஷ்ஷூக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். புவுனா கெளடா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். 19 வயதே ஆன உஜ்வல் குல்கர்னி படத்தொகுப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)