Actor Vishnu Vishal: மகன் பெயரில் நடிகர் விஷ்ணு விஷாலின் அடுத்த படம்... வெளியான அறிவிப்பு!
நடிகர் விஷ்ணு விஷால் தனது அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் பிக்சரை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்!

தமிழ்த் திரையுலகின் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர், விஷ்ணு விஷால். முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்பட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தற்போது எப்.ஐ.ஆர். உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
View this post on Instagram
நடிகர் நட்ராஜின் மகளான ரஜினி நட்ராஜ் என்பவரை காதலித்து 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில், இவருக்கும், ரஜினி நட்ராஜிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு இருவரும் விவகாரத்து பெற்றனர்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை விஷ்ணு விஷால் சில வருடங்களுக்கு முன்பு சந்தித்துள்ளார். முதலில் நண்பர்களாக பழகிய அவர்கள் பின்னர் காதலிக்கத் தொடங்கினர். இதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
View this post on Instagram
முன்னாள் பேட்மிண்டன் வீரர் சேத்தன் ஆனந்தை திருமணம் செய்து வாழ்ந்துவந்த ஜூவாலா கட்டா, கடந்த 2011-ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் பிக்சர் ஆகியவற்றைப் பகிர்ந்துள்ளார். இந்த படத்திற்கு தனது மகனுக்கு "ஆர்யன்" என்று பெயர் வைத்ததில் நடிகர் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இப்படத்தை சுப்ரா, ஆர்யன் ரமேஷ் தயாரிக்க, செல்வராகவன், வாணி போஜன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

