Actor Vishal: ’ஆபாச பட சிடியுடன் அப்பாவிடம் மாட்டிய விஷால்’ .. கடைசியில் நடந்த சிறப்பான சம்பவம்..!
தமிழ் சினிமா ரசிகர்களால் புரட்சி தளபதி என அன்போடு அழைக்கப்படுபவர் விஷால். ஆக்ஷன் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அவர், தொடர்ந்து பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.
தான் முதன்முதலாக ஆபாச படம் பார்த்து வீட்டில் சிக்கியது குறித்து நடிகர் விஷால் நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களால் புரட்சி தளபதி என அன்போடு அழைக்கப்படுபவர் விஷால். ஆக்ஷன் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அவர், தொடர்ந்து பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.இன்று (செப்டம்பர் 15) நடிகர் விஷால் நடிப்பில் ‘மார்க் ஆண்டனி’ படம் வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா, சுனில் வர்மா என பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் டீசர், ட்ரெய்லர் என அனைத்தும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் திரையுலகில் அறிமுகமாகி 19 ஆண்டுகளை நிறைவு செய்த விஷால், மார்க் ஆண்டனி பட ப்ரோமோஷன் தொடர்பாக பல நேர்காணல்களில் கலந்து கொண்டார். அதில் ஒரு நேர்காணலில் விஷாலிடம், நீங்கள் முதன்முதலில் பார்த்த ஆபாச படம் பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதில் சொன்ன விஷால், ‘அப்ப அந்த படத்துக்கு பெயர் ப்ளூ ஃபிலிம். இப்ப ஆபாச படங்கள் என சொல்கிறோம். முதன்முதலாக ஆபாச படம் பார்க்கலாம் என முடிவு பண்ணி நண்பர் ஒருத்தர்கிட்ட இருந்து கேசட் வாங்கிட்டு வீட்டுக்கு போனேன்.
அப்பா, அம்மா இல்லாத நேரத்துல அந்த பிளேயர் உள்ளே கேசட் போட்டு பார்க்கலாம் நினைச்சேன். ஆனால் அதுக்குள்ள அவங்க வீட்டுக்கு வந்ததால ஒரு அலமாரியில் நியூஸ் பேப்பரின் கீழ் ஒளித்து வைத்து விட்டு போய் விட்டேன். அடுத்தநாள் காலையில், எங்க அப்பா கேசட்டை கையில் வைத்துக் கொண்டு என்னை பார்த்தார். நான் அதைப் பார்த்ததும் ஷாக்காகி நாம ஒளிச்சி வச்ச கேசட்டா என செக் பண்ணேன். வச்ச இடத்துல இல்லாததால் மாட்டிக்கிட்டோம்ன்னு நினைச்சி திட்டுவாரா, அடிப்பாரான்னு புரியாம அவரையே பார்த்தேன்.
ஆனால் அப்பா கேசட்டை டேபிளில் வைத்து விட்டு சாப்பிட்டார். நானும் அவருடன் சேர்ந்து சாப்பிட்டேன். என்னிடம் எத்தனை மணிக்கு ட்யூஷன் என கேட்டார். நான் 8 மணிக்கு என பதில் சொல்ல, சரி ஓகே என கூறிவிட்டு சென்று விட்டார். கேசட் டேபிள் மேலேயே இருந்தது. அதை கொடுக்கவில்லை என்றால் கடைக்காரர் வந்து இவன்தான் வாங்குனான் என மாட்டி விட்டு விடுவார் என பயந்துட்டே இருந்தேன். ஆனால் எங்க அப்பா என்னை எதுவுமே சொல்லவில்லை. அவரின் அந்த அமைதி தான் என்னை மாற்றியது. திட்டியிருந்த கூட, ‘பார்க்குறதுல என்ன தப்பு இருக்குன்னு கேட்டுருப்பேன்’. இப்ப எல்லாம் ஆபாச படம் பார்க்க தளங்கள் வந்து விட்டது. அப்ப எல்லாம் தியேட்டரும், சிடிக்கள் தான் என வெளிப்படையாக விஷால் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Vijay with SAC: அமெரிக்காவில் இருந்து திரும்பிய கையுடன் அப்பா எஸ்.ஏ.சியை சந்தித்த விஜய்.. வைரலாகும் ஃபோட்டோ!