மேலும் அறிய

Vishal: த்ரிஷா பற்றி சர்ச்சை பேச்சு.. பணம் சம்பாதிக்கும் ட்ரெண்ட் என விஷால் கடும் கண்டனம்!

2017 ஆம் ஆண்டு நடந்த கூவத்தூர் சம்பவம் பற்றி பேசினார். அப்போது நடிகை த்ரிஷா  பற்றி ஆதாரமற்ற தரக்குறைவான கருத்துகளை தெரிவித்தார்.

நடிகை த்ரிஷாவை பற்றி தரக்குறைவான கருத்துகளை பேசிய முன்னாள் அதிமுக நிர்வாகிக்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட அதிமுக ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்து வந்த ஏ.வி. ராஜூ சமீபத்தில் கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 2017 ஆம் ஆண்டு நடந்த கூவத்தூர் சம்பவம் பற்றி பேசினார். அப்போது நடிகை த்ரிஷா  பற்றி ஆதாரமற்ற தரக்குறைவான கருத்துகளை தெரிவித்தார். இதற்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம், இயக்குநர் சேரன் தொடங்கி தமிழ் சினிமா பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

நடிகை த்ரிஷாவும் இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை தேவை என வலியுறுத்தியுள்ளார். ஆனால் ஏ.வி.ராஜூ வெளியிட்ட வீடியோவில் நான் திரிஷாவை பற்றி தவறாக பேசவில்லை. அவரை போன்றவர் என்றே குறிப்பிட்டேன். அது தவறாக திரித்து கூறப்பட்டுள்ளது என சொல்லி தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் ஏ.வி.ராஜூவுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

 இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் நீண்ட பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த  முட்டாள் ஒருவர் நம் திரையுலகைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி மிகவும் கேவலமாக பேசியதாகக் கேள்விப்பட்டேன். நான் சம்பந்தப்பட்ட உங்கள் பெயரையோ, நீங்கள் குறிவைத்த நபரின் பெயரையோ குறிப்பிட மாட்டேன். ஏனென்றால் நீங்கள் விளம்பரத்திற்காக இதைச் செய்தீர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் நிச்சயமாக பெயர்களைக் குறிப்பிட மாட்டேன்,
 
ஏனென்றால் நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமல்ல, திரையுலகில் பரஸ்பர சக கலைஞர்களாகவும் இருக்கிறோம். உங்களுக்கு மனசாட்சி இல்லாவிட்டாலும், நீங்கள் செய்த காரியத்திற்குப் பிறகு, உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் உங்களுக்கு சிறப்பான வரவேற்பை அளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
 
 பூமியில் இருக்கும் இத்தகைய தீய சக்திக்கு பதிலடி கொடுக்க ஒரு ட்வீட் போடுவது எனக்கு உண்மையிலேயே வேதனை அளிக்கிறது. நீங்கள் செய்தது முற்றிலும் குறிப்பிடத் தகுதியற்றது. உண்மையைச் சொன்னால், நான் உங்களைக் கண்டிக்க விரும்பவில்லை. ஆனால் நீங்கள் இதற்கான தண்டனை அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறேன். 
 
மீண்டும் ஒருமுறை நடிகர் சங்க பொதுச்செயலாளர் என்ற முறையில் இந்த அறிக்கையை வெளியிட விரும்பவில்லை. ஒரு மனிதனாகவே இதை சொல்கிறேன். நிச்சயமாக, இது பிரபலங்களைப் பற்றிய எதிர்மறையான விளம்பரத்தில் பணம் சம்பாதிக்க முயற்சிக்கும் ஒரு போக்காக மாறிவிட்டது. குறைந்தபட்சம் சில அடிப்படை ஒழுக்கங்களையாவது கற்றுக்கொள்ளுங்கள்” என காட்டமாக விஷால் கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

Jana nayagan : 'ஜனநாயகம்' T-Shirt டிமாண்ட்... அசுர வேகத்தில் தயாராகும் T-Shirts! நீங்க புக் பண்ணிட்டீங்களா...
Jana nayagan : 'ஜனநாயகம்' T-Shirt டிமாண்ட்... அசுர வேகத்தில் தயாராகும் T-Shirts! நீங்க புக் பண்ணிட்டீங்களா...
மணிகண்டனை கெஞ்சிக் கூத்தாடி நடிக்க வைத்த நண்பர்.. ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த மூவி - என்ன தெரியுமா?
மணிகண்டனை கெஞ்சிக் கூத்தாடி நடிக்க வைத்த நண்பர்.. ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த மூவி - என்ன தெரியுமா?
Jana Nayagan: ஜனநாயகன் மூலம் இயக்குநராக மாறிய முதல்வர் விஜய்.. அவரே இயக்கிய காட்சி எது தெரியுமா?
Jana Nayagan: ஜனநாயகன் மூலம் இயக்குநராக மாறிய முதல்வர் விஜய்.. அவரே இயக்கிய காட்சி எது தெரியுமா?
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் வினாத்தாள் கசிவு; ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்க வேண்டும்- பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு
நீட் வினாத்தாள் கசிவு; ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்க வேண்டும்- பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு
TN Budget 2026: ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொத்தாக அறிவிப்பு வரப்போகுது.! விஜய் அரசின் முதல் பட்ஜெட் - தேதியை அறிவித்த சபாநாயகர்
ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொத்தாக அறிவிப்பு வரப்போகுது.! விஜய் அரசின் முதல் பட்ஜெட் - தேதியை அறிவித்த சபாநாயகர்
கலைஞர் பற்றிய பாடங்கள் நீக்க வாய்ப்பு? தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டக் குழு ஆலோசனை
கலைஞர் பற்றிய பாடங்கள் நீக்க வாய்ப்பு? தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டக் குழு ஆலோசனை
CM Vijay: வட இந்தியாவில் எகிறும் விஜய் செல்வாக்கு! வாக்குளாக மாற்ற காங்கிரஸ் வியூகம்?
CM Vijay: வட இந்தியாவில் எகிறும் விஜய் செல்வாக்கு! வாக்குளாக மாற்ற காங்கிரஸ் வியூகம்?
Cheapset 9 Seater: நாட்டின் மலிவான 9 சீட்டர் - ரக்கட் எஸ்யுவி, டீசல் எடிஷன், 840KM மைலேஜ் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான 9 சீட்டர் - ரக்கட் எஸ்யுவி, டீசல் எடிஷன், 840KM மைலேஜ் - EMI விவரங்கள்
EPS-ஐ பாதுகாக்க வகுத்த விதி.! தங்களுக்கே ஆப்பாக மாறியதால் அலறும் CVS, SPV - அதிமுகவில் நடப்பது என்ன.?
EPS-ஐ பாதுகாக்க வகுத்த விதி.! தங்களுக்கே ஆப்பாக மாறியதால் அலறும் CVS, SPV - அதிமுகவில் நடப்பது என்ன.?
DMK: பற்றி எரியும் திமுக..! சைலண்ட் மோடில் போர்வாள்கள் - ஸ்டாலினின் தளபதிகள் எங்கே? வழக்கு பயமா?
பற்றி எரியும் திமுக..! சைலண்ட் மோடில் போர்வாள்கள் - ஸ்டாலினின் தளபதிகள் எங்கே? வழக்கு பயமா?
விஜய்கிட்ட சொல்லட்டா.. பணம் கேட்ட காவலரை மிரட்டிய வடமாநில லாரி ஓட்டுநர்!
விஜய்கிட்ட சொல்லட்டா.. பணம் கேட்ட காவலரை மிரட்டிய வடமாநில லாரி ஓட்டுநர்!
Embed widget