மேலும் அறிய

நீட் வினாத்தாள் கசிவு; ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்க வேண்டும்- பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு

நீட் வினாத்தாள் கசிவைத் தடுக்க ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதாக அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாகப் பிழைகளைச் சரிசெய்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் தடுக்க உறுதியான கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

போராட்டக் குழுவுடன் மத்திய அரசு பேச்சு

டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அவர்களுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன்படி, போராட்டக் குழு பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்துப் பேசினார். இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திற்கு (மங்கள் மிலன்) பின், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

குற்றவாளிகள் உடனடியாகக் கைது

"நீட் வினாத்தாள் கசிவு குறித்து தகவல் கிடைத்தவுடனேயே மத்திய அரசு விழிப்படைந்து உடனடியாகச் செயல்பட்டது. இந்த முறைகேட்டில் தொடர்புடைய 13 குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். மேலும், பாதிக்கப்படக் கூடிய மாணவர்களுக்கான மறுதேர்வும் குறித்த நேரத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது என்பதை கூட்டத்தில் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

வினாத்தாள் கசிவு இல்லாத, மிகவும் வலுவான மற்றும் பாதுகாப்பான தேர்வு நடைமுறையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தியுள்ளார். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது ஈவிரக்கமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்றுச் செயல்பட வேண்டும்

இனிவரும் காலங்களில் எவ்வித வினாத்தாள் கசிவும் ஏற்படாது என நாட்டின் இளைஞர்களுக்கு முழு உத்தரவாதம் அளித்துள்ள பிரதமர், இந்திய இளைஞர்கள் உலக அரங்கில் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வகையில் அவர்களை வழிநடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். நீட் வினாத்தாள் லீக்கை தடுத்து, நம்பகத்தன்மையை உருவாக்க ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்றுச் செயல்பட வேண்டும் என்பதே பிரதமரின் நிலைப்பாடாக உள்ளது.

வரவிருக்கும் மழைக்காலக் கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவளிக்கும். இளைஞர்கள் மற்றும் தேசம் சார்ந்த இதுபோன்ற முக்கியப் பிரச்சனைகளில் எதிர்க்கட்சிகள் அரசியலைக் கடந்து அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்" என்று கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் கசிவைத் தடுக்க, மத்திய அரசுதானே பொறுப்பேற்க வேண்டும். ஒட்டுமொத்த இந்திய தேசத்தையும் பொறுப்பாக்குவது ஏன் என்று விவாதங்கள் எழுந்து வருகின்றன. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Embed widget