மேலும் அறிய

Kamal Haasan on Vijay sethupathi: உதயநிதியின் இடத்தை பிடித்த விஜய்சேதுபதி; மீண்டும் இணைகிறதா விக்ரம் கூட்டணி?

கமல்ஹாசன் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பதாக இருந்தது. ஆனால், அமைச்சர் உதயநிதியின் திடீர் முடிவால், அது சாத்தியப்படவில்லை. அதனால் கமல்ஹாசனின் அடுத்த திரைப்படத்தின் கதாநாயகன் யார் என்று கேள்வி எழுந்தது.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் கடந்த வாரம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றதை அடுத்து "இனி படங்களில் நடிக்கப் போவதில்லை" என்று அறிவித்தார். மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் சமீபத்தில் ’கலகத்தலைவன்’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் 'இனி படங்களில் நடிக்கப் போவதில்லை' என்ற உதயநிதியின் கூற்றால் 'மாமன்னன்' திரைப்படமே உதயநிதியின் கடைசி திரைப்படம் என்று முடிவானது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by உதயநிதி ஸ்டாலின் (@udhayanidhi_stalin)

ஆனால் அதற்கு முன், கமல்ஹாசன் தயாரிப்பில் உதயநிதி நடிக்க இருப்பதாக நிகழ்ச்சி ஒன்றில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அமைச்சர் உதயநிதியின் திடீர் முடிவால், அது சாத்தியப்படவில்லை. அதனால் கமல்ஹாசனின் அடுத்த திரைப்படத்தின் கதாநாயகன் யார் என்று கேள்வி எழுந்தது. அந்த இடத்தை தற்போது விஜய் சேதுபதி நிரப்பப் போகிறார் என்ற அப்டேட் வெளியாகியுள்ளது.

இது குறித்து கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெளியான தகவல்களின்படி,  விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசனும், விஜய் சேதுபதியும் நல்ல நட்புறவை கொண்டுள்ளனர். அதனால் விஜய் சேதுபதி அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று கமல் நினைப்பதாகவும்; ஆனால் இன்னும் எதுவும் அதிகாரப்பூர்வமாகவில்லை என்றும் கூறியுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.


Kamal Haasan on Vijay sethupathi: உதயநிதியின் இடத்தை பிடித்த விஜய்சேதுபதி; மீண்டும் இணைகிறதா விக்ரம் கூட்டணி?

கமலின் அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்தால், இது கமல் - விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியாகும் இரண்டாவது திரைப்படம் ஆகும். இந்த கூட்டணி ஏற்கனவே விக்ரம் திரைப்படத்தில் இணைந்திருந்தது;மேலும் கமல்ஹாசன் நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க போவதாகவும் கூறியிருந்தார். அந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார் என்று தகவல் வெளியானது. 

இது மட்டுமின்றி மணிரத்னத்துடன் கமல்ஹாசன் ஒரு படத்தில் இணைகிறார். கமல் மணிரத்னம் கூட்டணி 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது. அதேபோல் விஜய் சேதுபதியும் மிக பிஸியாக இருந்து வருகிறார். தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பாலிவுட்டில் கத்ரினா கைஃப் உடன் 'மேரி கிறிஸ்மஸ்' திரைப்படத்திலும் அவர் கமிட்டாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget