மேலும் அறிய
Advertisement
அடுத்த வாரம் திருமணம்... முன்பே நேரில் சென்று வாழ்த்திய விஜய் சேதுபதி - மதுரையில் ரசிகர்கள் நெகிழ்ச்சி
மணமக்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்ட பின் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் படப்பிடிப்பிற்காக கிளம்பிச் சென்றார்.
ரசிகர் மன்ற மாவட்ட தலைவர், துணைச் செயலாளரின் திருமண விழாவில் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
ரசிகர்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் சிறு, சிறு வேடங்களில் நடித்து கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான 'தென்மேற்கு பருவக்காற்று' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்த அவர் ரஜினி, விஜய், ஷாருக்கான் என பல முன்னணி நடிகர்களுக்கும் வில்லனாக நடித்திருக்கிறார். நடிப்பதோடு மட்டுமல்லாமல் பாடகர், தயாரிப்பாளர் என பிற துறைகளிலும் தனது முத்திரையை விஜய் சேதுபதி பதித்துள்ளார். இந்நிலையில் உசிலம்பட்டியில் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர், துணைச் செயலாளரின் திருமண விழாவில் திரைப்பட நடிகர் விஜய்சேதுபதி நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
விஜய்சேதுபதி ரசிகர்கள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூரைச் சேர்ந்த ஜெயபாஸ், விஜய் சேதுபதி ரசிகர் மற்றும் நற்பணி மன்றத்தின் நாகை மாவட்ட தலைவராகவும், அவரது தம்பி ஜெயபால், விஜய் சேதுபதி ரசிகர் மற்றும் நற்பணி மன்றத்தின் நாகை மாவட்ட துணைச் செயலாளராகவும் உள்ளனர். இந்த இரு சகோதரர்களின் திருமண விழா வரும் 2- ம் தேதி உசிலம்பட்டியில் நடைபெற உள்ள சூழலில் இன்று இந்த மணமக்களை நேரில் சந்திக்க வந்த நடிகர் விஜய் சேதுபதி, இரு மணமக்களையும் ஆசிர்வதித்தார். தொடர்ந்து மணமக்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்ட பின் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் படப்பிடிப்பிற்காக கிளம்பிச் சென்றார்.
பொதுமக்களிடம் மகிழ்ச்சியாக பேசிய விஜய்சேதுபதி
இதுகுறித்து மணமக்களின் உறவினர்கள் சிலர் நம்மிடம்...,” நடிகர் விஜய் சேதுபதி மிகப்பெரும் லெஜெண்ட். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிக்கக்கூடியவர். அதே போல் பொதுமக்களிடம் எளிமையாக பழக்கூடியவர். திருமணாவிழாற்காக முன் கூட்டியே வந்து மணமக்களை வாழ்த்திச் சென்றார். இது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சுமார் 50 நபர்கள் மட்டும் தான் விழாவில் இருந்தோம். அதனால் அவருக்கு சிரமம் ஏற்படவில்லை. ஆனாலும் பலரும் தொடர்ந்து அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். யாரையும் உதாசீனப் படுத்தாமல் அனைவருடனும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். மணமக்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு அவர்களை வாழ்த்திச் சென்றார்” என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Amit Shah : “திருமயத்திற்கு வரும் அமித் ஷா” பாதுகாப்பு தரும் கோட்டை பைரவரை தரிசிப்பது ஏன் ? பரபரப்பு தகவல்கள்..!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Praggnanandhaa: நார்வே செஸ் போட்டியில் கலக்கிய பிரக்ஞானந்தா..! நம்பர் 1 வீரர் கார்ல்சனை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேற்றம்!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion