Happy Birthday Vijay : டிவி ஆங்கருக்கு தோசை.. பிடித்த பூரி, மட்டன் சாப்பாடு.. பிறந்தநாளான இன்று வைரலாகும் ஃப்ளாஷ்பேக் வீடியோ
நான் பார்த்து வியந்த மனிதர் நடிகர் ரஜினிகாந்த் என்று நடிகர் விஜய் பேட்டி கொடுத்த பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நான் பார்த்து வியந்த மனிதர் நடிகர் ரஜினிகாந்த் என்று நடிகர் விஜய் பேட்டி கொடுத்த பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் டிவி ஆங்கருக்கு தோசை ஊற்றிக் கொடுக்கிறார். அந்தப் பேட்டி அந்தக் காலத்திலேயே லைவ்லியாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஹோம் டூர் எல்லாம் இப்போது வந்த கான்செப்ட் என்றாலும் அதை அந்தக் காலத்திலேயே அந்த பேட்டியாளரும் விஜய்யும் செய்திருப்பது எல்லோரையும் கவர்வதாக உள்ளது.
தமிழ் திரையுலகில் ஸ்டார் நடிகர்களுள் ஒருவரான தளபதி விஜய் இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அவருடைய அடுத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இது ட்விட்டரில் மிகவும் வைரலானது. அந்த வகையில் இன்று விஜயின் பிறந்தநாள் காரணமாக ட்விட்டரில் "#HBDThalapathyVijay" என்ற ஹேஷ்டேக் தற்போது ட்ரெண்டாக தொடங்கியுள்ளது.
இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தி ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல திரைப் பிரபலங்களும் தளபதி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில், நான் பார்த்து வியந்த மனிதர் நடிகர் ரஜினிகாந்த் என்று நடிகர் விஜய் பேட்டி கொடுத்த பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் விஜய், நான் நடித்த நாளைய தீர்ப்பு படத்திற்கான பட பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது நான் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இருக்கிறது. அந்தப் புகைப்படத்தை நான் என் வீட்டில் எனது அறையில் மாட்டி வைத்துள்ளேன். நான் பார்த்து வியந்த மனிதர்களில் ஒருவர் ரஜினிகாந்த். அவரை எனக்கு அவ்வளவு பிடிக்கும். நான் லவ்டுடே படத்தில் நடிக்கும் போது ரஜினி சாருக்கு அருணாச்சலம் படம் சூட்டிங் போய்க் கொண்டிருந்தது. அப்போது ரஜினி சார் ரம்பா டூயட் சாங் எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஏவிஎம் ஸ்டூடியோவில் சூட்டிங் நடந்தது. அப்போது நான் அவரைச் சென்று பார்த்து பேசினேன். ரஜினி சார் ரம்பா சார் டூயட் சாங் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் ஒன்ஸ்மோர் படத்தில் சிவாஜி சாருடன் நடித்திருக்கிறேன். அவருடைய பங்க்சுவாலிட்டி, சின்சிராட்டி பார்க்க ரொம்ப வாஞ்சையாக இருக்கும். அவரிடம் நான் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். அவருடன் நடித்ததில் ஒரு பள்ளிக் கூடத்தில் படித்ததுபோல் நிறைய அனுபவம் கிடைத்தது. சிவாஜி சார் பாடல்களில் எனக்கு பறவைகள் பலவிதம் ரொம்பப் பிடிக்கும் என்று பேசியிருக்கிறார்.
விஜய்யின் சமையல்காரர் விஜய்க்கு தோசை, பூரி பிடிக்கும். மதியம் மட்டன், சிக்கன் சாப்பாடு பிடிக்கும் என்று கூறுவதும் பதிவாகியுள்ளது. ஒரு ட்ரெண்ட் செட்டிங் வீடியோவாக அந்தக் காலத்தில் அந்த வீடியோ இருந்திருக்க வேண்டும். விஜய்யிடம் பேட்டி காணும் பெண் ஒரு தோசை கேட்க அவரை கிச்சனுக்கே அழைத்துச் சென்று தோசை ஊற்றித் தருகிறார் விஜய். அதுமட்டுமல்லாது தான் உடற்பயிற்சி செய்யும் அறை, எந்த அறையில் அமர்ந்து திரைக்கதை கேட்பேன் என அனைத்தையும் டூர் செய்துள்ளார்.